தீபிகா - ரன்வீர் முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதியில் சாமி தரிசனம்!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்!

Updated: Nov 14, 2019, 02:06 PM IST
தீபிகா - ரன்வீர் முதலாம் ஆண்டு திருமண நாளையொட்டி திருப்பதியில் சாமி தரிசனம்!!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்!

பாலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒருவரான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன்நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. 
இந்நிலையில், இன்று தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் தீபிகா - ரன்வீர் தம்பதியினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வந்த ரன்வீர் சிங், தீபிகா ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

முதலாவதாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதி சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தீபிகா. அத்துடன் "எங்களது முதலாவது திருமண நாளை முன்னிட்டு, வெங்கடாஜலபதியிடம் ஆசி பெற்றோம். உங்களது அளவு கடந்த அன்பு, ஆசி மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். 

சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் தீபிகாவும், அவருடன் ரன்வீர் சிங் ஜாரிகை வேலைப்பாடுகள் நிறைந்த தங்க நிற குர்தாவும், பிங்க் கலர் துப்பட்டாவும் அணிந்து புதிதாக திருமணம் ஆன ஜோடி போல காட்சியளிக்கின்றனர். பாலிவுட்டின் க்யூட் கம்புல்ஸான தீபிகா - ரன்வீரின் திருப்பதி விசிட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.