பாகுபலி இயக்குநர் ராஜமெளலியையும் விட்டுவைக்காத பாகுபலி Covid-19

பாகுபலி திரைப்பட இயக்குநர் ராஜமெளலி மற்றும் குடும்பத்தினரையும் பாகுபலி கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2020, 09:15 AM IST
  • நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும் பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்
  • இயக்குநர் ராஜமெளலியினர் குடும்பத்தினருக்கும் கொரோனா
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியையும் விட்டுவைக்காத பாகுபலி Covid-19 title=

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கு யார் மீதும் அச்சமே இல்லை... உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்கிருமிக்கு ஏழை-பணக்காரன், பிரபலம் சாமானியன் என்ற எந்தவித பாகுபாடும் இல்லை.

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை கொடுத்த திரைப்பட இயக்குநர் ராஜமெளலியையும் இந்த பாகுபலி வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட் பிரபலம், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், உலக அழகி ஐஸ்வர்யா ராய், என யாரையும் விட்டு வைக்காமல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டது இந்த உலகளாவிய தொற்றுநோய்.

தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அமிதாப்  பச்சன் தானே முன்வந்து சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்தைப் போலவே, இயக்குநர் ராஜமெளலியும் தனது ட்விட்டர் பதிவில் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.

’சில தினங்களுக்கு முன்பு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை செய்துக் கொண்டோம். இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்’ என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி, தனது டிவிட்டர் செய்தியில் தான் ஒரு பொறுப்பான, பிறன் நலன் விரும்பி என்பதையும் பதிவு செய்துள்ளார். ‘நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்’ என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார். 

ராஜமெளலி விரைவில் குணம் பெறவேண்டும் என பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதிலும் திரையுலகினர் முன்னணியில் இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் ஐம்பது லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார். நடிகர் சிவக்கார்த்திகேயன் பத்து லட்சம் ரூபாயை அளித்திருக்கிறார்.நடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்தின் சார்பாக பத்து லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக வழங்கியிருக்கிறார். 

Read Also | கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிய ஐஸ்வர்யாவையும் ஆராத்யாவையும் வரவேற்கும் Jalsa...

நடிகர் விஜய் சேதுபதி ஃபெப்ஸி தொழிலாளர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். திரைப்படத் தயாரிப்பாளர் லலித்குமார் பத்துலட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். நடிகர் பிரகாஷ்ராஜ் அரிசி மூட்டைகளை உதவியாக வழங்கியிருக்கிறார்.

”அஜித்தைப் போல உதவி செய்யும் குணம் படைத்தவர் யாருமில்லை. அந்த அளவிற்கு அடுத்தவரின் நலம் குறித்து அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வார்” என்று ராஜமெளலி ஒருமுறை தெரிவித்திருந்தார். 

உலகளாவிய கொரோனா தொற்றானது மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டாலும், ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி அனைவரும் சமம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

Trending News