‘மோனா லிசா’-வின் நிர்வாண ஓவியத்தை வரைந்தாரா Da Vinci?

உலக புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தின் நிர்வாண ஓவியத்தை டா வின்சி வரைந்தார் எனவும், அதன் பெயர் மோனா வானா எனவும் செய்திகள் பரவி வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Mar 5, 2019, 08:31 PM IST
‘மோனா லிசா’-வின் நிர்வாண ஓவியத்தை வரைந்தாரா Da Vinci? title=

உலக புகழ் பெற்ற மோனா லிசா ஓவியத்தின் நிர்வாண ஓவியத்தை டா வின்சி வரைந்தார் எனவும், அதன் பெயர் மோனா வானா எனவும் செய்திகள் பரவி வருகின்றன.

லியோனார்டோ டா வின்சியின் தலைசிறந்த மோனா லிசா வரலாற்றில் மிகவும் பாராட்டப்பட்ட ஓவியங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளாக, இந்த பழம்பெரும் கலைப்படைப்பின் பிரதிபலிப்புகள் நிறைய கண்டறியப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் தற்போது ​​பழம்பெரும் கலைப்படைப்பான மோனா லிசா-வின் 'நிர்வாணப் பதிப்பானது' இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், இந்த ஓவியமும் லியோனார்டோ டா வின்சியின் கலைப்படைப்பாக இருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து பாரிசில் உள்ள லூவ்ரே வல்லுநர்கள் தெரிவிக்கையில்., இந்த நிர்வாணக் கலை படைப்பானது 'மோனா லிசா' ஓவித்தின் ஒற்றுமையை பெற்றுள்ளது. எனவே இது டா வின்சியின் படைப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் ஆனது உலகின் மிகப்பெரிய கலைப்படைப்புகளை கொண்ட களஞ்சியமாகும். லியோனார்டோ டா வின்சியின் மோனா லிசா உட்பட மிகப்பெரிய தொகுப்புகளை இந்த அருங்காட்சியகம் பராமரித்து வருகிறது. லியோனார்டோ டா வின்சியின் பல படைப்புகளை ஆய்வு செய்த கலை வல்லுநர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த நிர்வாண புகைப்படத்தையும் ஆய்வு செய்து தங்களது கருத்தை பதிவு செய்துள்ளனர்.

"லியோனார்டோ பெரும்பாலான வரைபடங்களை படைதார் என்றாம் என்பது மறுக்கமுடியாத உண்மை. பெரிய கலைஞர்களால் செய்யப்படும் சிறிய நுணுக்கங்களும் மிகப்பெரிய வேலைபாடினை வழங்கும். இந்த வலிமையான வேலைபாடு இந்த ஓவியத்தில் பார்க்க முடிகிறது" என பாரிஸ் அருங்காட்சியக பொறுப்பாளர் மாரிஸ் டெல்டிக் தெரிவித்துள்ளார்.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த நிர்வாண ஓவியம் ஆனது கடந்த 1862-ஆம் ஆண்டு முதல் பாரிஸ் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மோனா லிசா-வின் உருவம் போன்று வரையப்பட்டுள்ள இந்த படத்தினை குறித்து வரலாற்று ஆய்வாலர்ளின் உதவியோடு டெல்டிக் ஆய்வு செய்து வருகின்றார்.

Mona Lisa

தற்போது ​​டா வின்சி 500-வது ஆண்டு நினைவு தினத்தை குறிக்க, இந்த ஆண்டு வர்ஜீனியாவின் சாண்டில்லியில் ஒரு சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியின் போது இந்த நிர்வாண ஓவியமும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சிக்கு பின்னரே இந்த ஓவியம் தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Trending News