ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவாரா மாட்டாரா... காயத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Jasprit Bumrah Injury: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துவீசுவாரா இல்லையா என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 4, 2025, 11:16 PM IST
  • இந்திய அணியிடம் தற்போது 4 விக்கெட்டுகள் உள்ளன.
  • 145 ரன்கள் இந்திய அணி முன்னிலை வகிக்கிகறது.
  • வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா களத்தில் உள்ளனர்.
ஜஸ்பிரித் பும்ரா பந்துவீசுவாரா மாட்டாரா... காயத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

India National Cricket Team: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜன. 3) சிட்னி நகரில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 185 ரன்களையும், அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 181 ரன்கள் அடித்தது.

Add Zee News as a Preferred Source

4 ரன்கள் முன்னிலை உடன் பேட்டிங் செய்த இந்திய அணி (Team India) இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர  முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் 145 ரன்கள் முன்னிலையுடன் இருக்கம் இந்திய அணியின் கையில் நான்கு விக்கெட்டுகள் உள்ளன. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பும்ராவுக்கு முதுகு படிப்பு

நாளைய டெஸ்ட் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியாவுக்கு இலக்கு நிர்ணயித்துவிட்டால், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

மேலும் படிக்க | இந்திய அணி கோப்பையை வெல்ல... இந்த டார்கெட்டை செட் செய்தாலே போதும்!

இது ஒரு புறம் இருக்க இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இன்று பும்ரா காயம் காரணமாக (Jasprit Bumrah Back Spasm) இரண்டாவது செஷனில் பந்து வீசவில்லை. அவருக்கு முதுகு பிடிப்பு பிரச்சனை இருப்பதாக பிரசித் கிருஷ்ணா கூறியது குறிப்பிடத்தக்கது. கேப்டன் பும்ரா களத்தில் இல்லாத சமயத்தில் விராட் கோலி கேப்டன்சியை கவனித்துக் கொண்டார். 

பும்ரா பேட்டிங் செய்வாரா, பந்துவீசுவாரா...?

தொடர்ந்து காயத்தை பரிசோதிக்க அவர் ஸ்கேன் மையத்திற்கு இன்று மைதானத்தில் இருந்து காரில் சென்றார். ஸ்கேன் எடுத்து முடித்தவுடன் போட்டி முடிவதற்கு முன்னரே சிட்டி மைதானத்திற்கு வந்து இருப்பதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். நாளைக்கு ஒருவேளை இந்தியாவின் விக்கெட் சரிந்தால் பும்ரா வந்து பேட்டிங் ஆடுவாரா, இந்திய அணி ஆல்அவுட்டான பின்னர் அவர் புது பந்தில் கையை எடுத்து வழக்கம் போல் பந்துவீசுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருக்கிறது.

அப்படி இருக்க தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஒருவேளை நாளை விக்கெட் சரிந்து பேட்டர்கள் ஆட்டமிழக்கும்போது, பத்தாவது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்குவார் என உறுதியாக நம்பலாம். இருப்பினும் அவர் பந்துவீசுவாரா என்பது நாளை காலை மருத்துவ குழுவின் கையிலேயே இருக்கிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வெற்றி நிச்சயம்... ஆனால்

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு போட்டி தொடங்கும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை (Border Gavaskar Trophy) பெறுவது மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு (ICC World Test Championship Final) தகுதிபெறும் வாய்ப்பும் இந்திய அணிக்கு இருக்கும். 

எனவே, இந்த போட்டியை வெல்ல பும்ரா ஒரு முக்கிய துருப்புச்சீட்டு ஆவார். அவருக்கு சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பாக கைக்கொடுத்தார்கள் என்றால் இந்தியாவின் வெற்றி உறுதி. அந்த வகையில், இன்றிரவு முழுவதும் ரசிகர்கள் அனைவரும் பும்ரா எப்படியாவது பந்துவீச வர வேண்டும் என்ற வேண்டுதலுடன் இருப்பார்கள் எனலாம். 

மேலும் படிக்க | இந்திய அணியின் அடுத்த கேப்டன்... ரோகித் சர்மா கொடுத்த சிக்னல்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News