ஆளில்லா விமானம் மூலம் பரிசோதனைக்கான அனுப்பப்பட்ட ரத்த மாதிரி!

உத்தரகாணட் மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சாதனை!!

Last Updated : Jun 8, 2019, 01:33 PM IST
ஆளில்லா விமானம் மூலம் பரிசோதனைக்கான அனுப்பப்பட்ட ரத்த மாதிரி! title=

உத்தரகாணட் மாநிலத்தில் ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சாதனை!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தின் தொலைதூர பகுதியான நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரிகளை ஆளில்லா விமானம் மூலம் அனுப்பி சோதனை நடத்தப்பட்டது.  

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் இன்றி ஆளில்லா விமானம் மூலம் 18 நிமிடங்களில் நண்ட்கானில் இருந்து டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரி வந்து சேர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த இரு மருத்துவமனைகளுக்கு இடையிலான தூரம் 30 கிலோமீட்டர் ஆகும். 

அதன்படி 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெஹரி மருத்துவமனைக்கு ஆளில்லா விமானம் மூலம் ரத்த மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது. 32 கிலா மீட்டர் தூரத்தை ஆளில்லா விமானம் 18 நிமிடத்தில் சென்றடைந்தது. இதன் மூலம் மருத்துவ பயன்பாட்டிற்கு ஆளில்லா விமானம் பெரும் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த முறை விரிவுபடுத்தப்பட்டால் கிராமப்பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் பயன்பெறுவார்கள் என மருத்துவர்கள் கூறினர். ஆளில்லா விமானத்தின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய எதிர்காலத்தில் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

 

Trending News