தந்தை ஆகின்றார் விராட் கோலி; இணையத்தில் வைரலாகும் Video!

விராட் - அனுஷ்கா தம்பதியர் பெற்றோர் ஆகவுள்ளனர் என செய்திகள் பரவி வருகிறது.

Updated: Sep 16, 2018, 06:19 PM IST
தந்தை ஆகின்றார் விராட் கோலி; இணையத்தில் வைரலாகும் Video!

விராட் - அனுஷ்கா தம்பதியர் பெற்றோர் ஆகவுள்ளனர் என செய்திகள் பரவி வருகிறது.

காதலர்களாக வலம் வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா கடந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முடிந்த நாளில் இருந்து இத்தம்பதியரின் வாரிசு வரவு குறித்து தொடர்ந்து வததிகள் பரவி வருகின்றது.

ஒவ்வொரு முறை வதந்திகள் வெளிவரும் போதும், அதன் முடிவு தோல்வியிலேயே முடிகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கோலி - அனுஷ்கா குழந்தை குறித்த வதந்திகள் வெளியாகியுள்ளது.

ஒருபக்கம் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிந்து தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பிஸியாக உள்ள நிலையில், மறுபக்கம் அனுஷ்கா தனது சுய் தாகா திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார்.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் வருண் தவான் மற்றும் கலந்துக்கொண்டார், அனுஷ்கா ஷர்மா முதுகுவலி காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிப்பினை கேட்ட அவரது ரசிகர்கள், அனுஷ்கா கர்ப்பவதியாக ஆனதால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என வீடியோ-வுடன் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

வதந்திக்களுகு காரணமாக அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

True or fals . . . #instabolly #bollywood

A post shared by Bollywood Entertainmen  (@lnstabolly) on