பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Flipkart Big Billion Day Sale-க்கு முன்னதாக, பிளிப்கார்ட் இரண்டாம் அடுக்கு நகரங்கள் அதாவது Tier II நகரங்கள் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாணவர்களுக்கான சம்பளத்துடன் கூடிய (Paid Internship) இன்டர்ன்ஷிப் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 21 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் பிரபலமான இந்த இ-காமர்ஸ் தளத்தின் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
45 நாள் இன்டர்ன்ஷிப் திட்டமான Launchpad, மாணவர்களுக்கு சப்ளை சங்கிலி நிர்வாகத்தில் முக்கியமான திறன்களைப் பெற உதவுவதோடு, இ-காமர்ஸ் (e-Commerce) துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்களின் குழு அமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.
பிளிப்கார்ட்டின் விநியோகச் சங்கிலியில் பணியாற்ற மாணவர்களை அறிமுகப்படுத்தவும், மின்வணிகத்தின் முதுகெலும்பாக இருக்கும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளவும் Launchpad வடிவமைக்கப்பட்டுள்ளது. "இந்த திட்டம் இந்தியாவின் எதிர்கால பணியாளர்களை பல்வேறு அத்தியாவசிய விநியோக சங்கிலி பாத்திரங்களில் வடிவமைக்கும். இது நீண்ட காலத்திற்கு நன்கு தகுதிவாய்ந்த, நன்கு பயிற்சி பெற்ற, மற்றும் திறமையான நிபுணர்களின் குழு அமைப்பை உருவாக்க உதவும்" என்று பிளிப்கார்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வெளிப்பாடு மாணவர்கள் தங்கள் செயல்பாடுகளில் நீண்டகால நெகிழ்திறன் மற்றும் சுறுசுறுப்பை உருவாக்க உதவுகிறது. அதே நேரத்தில் வேகமாக மாறிவரும் இந்த வெளிப்புற சூழ்நிலையில் அவர்களை இது மேம்படுத்துகிறது என்று Flipkart குறிப்பிடப்பட்டுள்ளது.
பினோலா (ஹரியானா), பிவாண்டி (மகாராஷ்டிரா), உலுபீரியா மற்றும் டங்குனி (மேற்கு வங்கம்) மற்றும் மாலூர் (கர்நாடகா), மேட்சல் (தெலுங்கானா) உட்பட 21 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் பிளிப்கார்ட் பணியாற்றி வருகிறது. இங்குள்ள திறன் படைத்த மாணவர்கள் Flipkart-ன் இந்த பணித்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படும். விநியோகச் சங்கிலி நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பிளிப்கார்ட் கூறியுள்ளது.
ALSO READ: Flipkart Big Billion Days Sale: இந்த Motorola ஸ்மார்ட்போனுக்கு ரூ .40,000 வரை தள்ளுபடி
பணியிடங்களுக்குள் நுழைவதற்கு முன்பு உடல் வெப்ப பரிசோதனை அனைவருக்கும் கட்டாயமாக செய்யப்படும். பயிற்சியாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் ஆரோக்ய சேது செயலியை (Arogya Sethu App) வைத்திருக்க வேண்டும்.
பிளிப்கார்ட்டின் மூத்த துணைத் தலைவர் அமிதேஷ் ஜா கூறுகையில், “இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இ-காமர்ஸ் துறையில் அறிவைப் பகிர்ந்து கொள்வதிலும், திறமையான பணியாளர்களின் குழு அமைப்பை உருவாக்குவதிலும் பிளிப்கார்ட் எப்போதும் முன்னணியில் உள்ளது” என்றார். பிளிப்கார்ட் கடந்த ஆண்டு லாஞ்ச்பேட் இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஒரு நவீன விநியோகச் சங்கிலியில் பணியாற்றிய அனுபவத்துடன் மாணவர்கள் இந்தத் துறையில் வெற்றிபெற தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.
"வரவிருக்கும் பண்டிகை காலங்களில் எங்கள் இன்டர்ண்களுக்கு சுவாரசியமான மற்றும் பயனளிக்கும் பணி அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது விநியோகச் சங்கிலி மீது அதிக ஆர்வத்தை உருவாக்க உதவும்" என்று ஜா மேலும் கூறினார்.
பண்டிகை காலம் மற்றும் அதன் பிக் பில்லியன் நாட்கள் விற்பனைக்கு முன்னதாக நாட்டில் 70,000 நேரடி மற்றும் லட்சம் மறைமுக வேலைகளை உருவாக்க இது உதவும் என்று வால்மார்ட்டுக்கு (Walmart) சொந்தமான பிளிப்கார்ட் முன்பு கூறியது. கடந்த ஆண்டு, பிளிப்கார்ட்டும் அதன் போட்டியாளரான அமேசானும் (Amazon) தங்கள் பண்டிகை விற்பனைக்கு முன்னதாக, சப்ளை சங்கிலி, கடைசி மைல் இணைப்பு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட தற்காலிக வேலைகளை அறிவித்திருந்தன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR