‘இந்த’ 5 விஷயங்களை செய்தால் உங்கள் வாழ்க்கையை மாறிவிடும்! ட்ரை பண்ணுங்களேன்..!

நம் வாழ்க்கையை சில பழக்க வழக்கங்கள் அடியோடு புரட்டி போட்டு விடும். அந்த பழக்கங்கள் நம் உடல் நலனிற்கும் மன நலனுக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 25, 2023, 04:28 PM IST
  • வாழ்க்கை முறையை மாற்றும் பழக்க வழக்கங்கள்.
  • தியானம் செய்தல், எழுதுதல் போன்றவை மனதை ஒருநிலை படுத்தும்.
  • வேறு என்னென்ன பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்கலாம்..?
‘இந்த’ 5 விஷயங்களை செய்தால் உங்கள் வாழ்க்கையை மாறிவிடும்! ட்ரை பண்ணுங்களேன்..!  title=

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கங்கள், நமது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சி அற்ற நாட்கள், கட்டுப்பாடற்ற எடை, புகைபிடித்தல், புகையிலை பயன்பாடு மற்றும் சீரற்ற தூக்கம் ஆகியவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு சில பொதுவான பழக்கங்களாக உள்ளன.  ஆனால், இன்று அது போன்ற வாழ்க்கை முறைக்கு நம்மை அறியாமல் நாம் பழகி விட்டோம். நீரிழிவு, இருதய நோய் போன்ற நோய்களுக்கு முக்கிய காரணங்களுக்காக இது போன்ற நோய்களே அமைந்துள்ளன. மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க நாம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுதல் வேண்டும். 

1.ஆரோக்கியமான டயட்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவு முறைகள் மிகவும் முக்கியம். இது, நெடுநாள் நோய் பாதிப்புகளான புற்றுநோய், இருதய கோளாறு, சர்க்கரை நோய் உள்ளிட்டவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. ஆரோக்கியமான டயட் வாழ்க்கையை கடைப்பிடித்தால் நாம் வாழ்நாள் முழுவதும் பயன் பெறலாம். அதற்கு சர்க்கரை மற்றும் உப்பின் அளவை நம் உணவுகளில் இருந்து குறைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் கலந்த உணவுகளை தவிர்த்து கொழுப்பில் இருந்து விடுபடுவதற்கான வழியை பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகள் பொய் கூறினால் என்ன செய்யலாம்..?

2. தூக்க நேரம்: 

ஒவ்வொரு நாளும் போதுமான தூக்கத்தை பெறுவது ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒரு முக்கிய பகுதியாகும். போதுமான தூக்கம் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
நல்ல தூக்கம், நமக்கு நோய்களை எதிர்த்துப் போராடவும், ஆரோக்கியமான எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது. கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் நல்ல தூக்கம் உதவுகிறது. 
நீரிழிவு மற்றும் இதய நோய், மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை மேம்படுத்தி உங்கள் ஆளுமையை நல்ல தூக்கம் மேம்படுத்துகிறது. 

3.தினசரி உடற்பயிற்சி: 

உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ல தினசரி உடற்பயிற்சி உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக தினசரி உடற்பயிற்சியை கடைப்பிடிக்க வேண்டுமாம். டயட் உடன் சேர்த்து உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை வேகமாக குறைகிறது. உடற்பயிற்சி செய்வதால் கொழுப்பு கரைகிறது, இது உடலில் உள்ள பாகங்கள் ஒழுங்காக செயல்பட உதவுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 

4.தியானம்:

மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வது தெளிவான சிந்தனைகளை நம் மனதில் விதைக்கிறது. கவனச்சிதறல், பதற்றமான மனநிலை போன்றவற்றையும் தியானம் மேற்கொள்வதால் தவிர்க்கலாம். இது, நம் மனநிலையை நாமே ஆராய நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். மன அழுத்தத்தில் இருப்போர், இதய கோளாறால் பாதிக்கப்பட்டோர், ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோர் என பலர் இதனால் பயன் பெறுகின்றனர். 

5. எழுதுதல்:

உங்கள் நாள் எப்படி இருக்கிறது என்பதை எதிலாவது எழுதி பழக வேண்டும். ஏதாவது உங்கள் மனதை போட்டு அழுத்திக்கொண்டிருந்தால் அதையும் எழுதலாம். இதனால் உங்களை பாடாய் படுத்தும் அந்த விஷயத்திற்கு பதில் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதுவும் நம் மனதை நிதான படுத்த செய்யப்படும் ஒரு பயிற்சியே. வாழ்வில் வெற்றி பெற்ற பலர் எழுதுவதை பழக்கமாக கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | அரசின் ஜாக்பாட் திட்டம்... இனி ரூ. 25 லட்சம் வரை காப்பீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News