Free Health Insurance: ராஜஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, சிரஞ்சீவி ஸ்வஸ்த்யா பீமா யோஜனா திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற பயனாளிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இ-மித்ராவில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு ரசீது இருப்பது கட்டாயம். இந்த திட்டத்தில் இணைவது எப்படி என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ராஜஸ்தான் அரசு அம்மாநில மக்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்குகிறது. அரசின் சார்பில் முதலமைச்சரின் சிரஞ்சீவி ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம் மூலம், ராஜஸ்தானின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை வசதி வழங்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு 2011இன் பயனாளிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யத் தேவையில்லை, மாறாக அவர்களுக்கு இந்தப் பரிசு ஏற்கனவே உள்ளது என்று மாநில அரசு கூறியுள்ளது.
திட்டத்தின் பலனை எவ்வாறு பெறுவது?
சிறு மற்றும் குறு விவசாயிகள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற பயனாளிகள் மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இ-மித்ராவில் பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு ரசீது இருப்பது கட்டாயம். உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, முதலில் ஆதார் பதிவு செய்ய வேண்டும். இதற்கு முன்பு இந்த தொகை ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக இருந்தது, இது ஆண்டுக்கு ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | வங்கி கணக்குக்கு ரூ.2000 தேடி வரும்.. 15-வது தவணை நிதிக்கான விண்ணப்ப செயல்முறை
யார் தகுதியானவர்கள்?
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது தகுதியுள்ள குடும்பங்கள், சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு (SECC) 2011இன் தகுதியுள்ள குடும்பங்கள், மாநில அரசுத் துறைகள்/ போர்டுகள்/ கார்ப்பரேசன்கள்/ அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள் மற்றும் கடந்த ஆண்டு கொரோனா கருணைத் தொகையைப் பெற்றவர்கள், ஆதரவற்ற குடும்பங்கள் இலவச பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மாநில அரசால் தீர்மானிக்கப்படும் அத்தகைய பிரிவின் தகுதியான குடும்பங்களுக்கான பிரீமியத்தில் 100 சதவீதம் அரசால் செலுத்தப்படும்.
இவைகளுக்கு இலவச சிகிச்சை
ராஜஸ்தான் அரசு அதன் சிரஞ்சீவி ஸ்வஸ்திய பீமா யோஜனாவில் பல தீவிர நோய்களை சேர்த்துள்ளது. கருப்பு பூஞ்சை, இதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பு அறுவை சிகிச்சை, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் இதில் அடங்கும். அதாவது, இந்த அத்தனை நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இந்த வருட இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, காங்கிரஸ் ராஜஸ்தானை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளது. தொடர்ந்து, பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை இந்த அரசு அறிவித்து, அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் அரசின் இந்த காப்பீடு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரும் நலனை அளிக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ