புதுடெல்லி: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் கனரா வங்கி எஃப்டி விகிதங்கள்: எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிக்குப் பிறகு தற்போது கனரா வங்கி தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. பொதுத்துறை கனரா வங்கியானது, வெவ்வேறு காலகட்டங்களில் நிலையான வைப்புத்தொகைகளுக்கு (எஃப்.டி) 0.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
புதிய கட்டணங்கள் மார்ச் 1, 2022 முதல் அமலுக்கு வரும்
கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கட்டணங்கள் மார்ச் 1, 2022 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்திற்கு எஃப்.டி இன் வட்டி விகிதம் 5.1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அது கூறியது. ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான எஃப்.டிகளில், 5 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 2-3 வருட எஃப்.டிக்கு 5.20 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கும்.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி! வங்கியின் இந்த புதிய சேவை சூப்பர்!
அதிகபட்சமாக 0.25 சதவீதம் அதிகரிப்பு
கனரா வங்கி சார்பில், 3-5 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் முன்பு 5.25 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. வங்கி தரப்பில், 5-10 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்புத்தொகைக்கு அதிகபட்சமாக 0.25 சதவீதம் அதிகரித்து 5.5 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் அதாவது அனைத்து எஃப்டிகளிலும் அரை சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
ஆர்.டி மீதான வட்டியும் அதிகரித்தது
கடைசி நாட்களில், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா ஆகியவையும் எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளன. எஸ்பிஐ பிப்ரவரி 20 அன்று ஆர்.டிகளின் விகிதங்களையும் மாற்றியது.
எஸ்பிஐயில் எஃப்டி மீதான வட்டி
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை------2.90%
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை----3.90%
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை------4.40%
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது------4.40%
1 வருடத்திற்கு மேல் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக ----5.10%
2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகளுக்கு குறைவாக -----5.20 %
3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறைவாக -----5.45%
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை -----5.50%
(ஆதாரம்: www.paisabazaar.com) (மூத்த குடிமக்களுக்கு ஒரு தவணைக்காலத்திற்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி)
எச்டிஎஃப்சியில் எஃப்டியில் கிடைக்கும் வட்டி
7 முதல் 14 நாட்கள் ----2.50%
15 முதல் 29 நாட்கள் -----2.50%
30 முதல் 45 நாட்கள் -----3.00 %
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை -----3.00 %
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை -----3.00 %
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை -----3.50%
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை ----4.40%
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது----4.40%
1 வருடம் வரை ----5.00%
1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை ----5.00%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை ----5.20%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை ----5.45%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை ----5.60%
(ஆதாரம்: www.paisabazaar.com) (மூத்த குடிமக்களுக்கு ஒரு தவணைக்காலத்திற்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி)
மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வங்கியும் FD வட்டி விகிதத்தை அதிகரித்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR