ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: அரசின் நடவடிக்கையால் 23 லட்சம் பேருக்கு நன்மை

மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 6, 2021, 08:10 PM IST
  • பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் சமீபத்திய பிபிஓ நகலை டிஜி லாக்கர் செயலியில் நேரடியாகப் பெற முடியும்.
  • இந்த நடவடிக்கை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • டிஜி லாக்கர் என்பது உங்கள் அனைத்து முக்கிய ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் சேமிப்பதற்கான ஒரு செயலியாகும்.
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: அரசின் நடவடிக்கையால் 23 லட்சம் பேருக்கு நன்மை title=

புதுடெல்லி: பாதுகாப்புத் துறையில் இருக்கும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய முறையை எளிமையாக்கும் முயற்சியில், மத்திய அரசு மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை (EPPO) டிஜி லாக்கருடன் இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை, பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி, ஓய்வூதியம் பெறும் செயல்முறையை எளிதாக்க, அலகாபாத்தின் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் (PCDA) ஓய்வூதிய அமைப்பால் உருவாக்கப்பட்ட மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை (PCDA) டிஜி லாக்கருடன் ஒருங்கிணைத்துள்ளதாக கூறியது. 

மின்னணு ஓய்வூதியக் கட்டண உத்தரவை டிஜி லாக்கருடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அம்சத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்த ஓய்வூதியதாரர்கள் சமீபத்திய PPO நகலை டிஜி லாக்கர் செயலியிலிருந்து (Digi Locker App) நேரடியாகப் பெற முடியும்.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்குமா DA, DR அரியர் தொகை? அரசு கூறுவது என்ன?

PPO இன் அனைத்து பதிவுகளும் டிஜி லிக்கரில் நிரந்தரமாக சேமிக்கப்படும். மேலும், இப்போது ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) ஃபிசிக்கல் நகலைப் பெறுவதற்கு அலுவலகத்திற்கு வரவேண்டியது இல்லை. புதிய ஓய்வூதியதாரர்களுக்கு PPO ஐ அடைவதில் ஏற்படும் தாமதங்களையும் இந்த முடிவு களைந்துவிடும்.
 
பிசிடிஏ (ஓய்வூதியம்), அலகாபாத், 23 லட்சத்துக்கும் அதிகமான பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு டிஜி லாக்கர் தளத்தின் மூலம் ஈபிபிஓக்களை வழங்குவதற்காக சேவை வழங்குநராக பட்டியலிடப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் EPPO பதிவுகளை எங்கிருந்து வேண்டுமானாலும் அணுக முடியும்

இதற்கிடையில், மத்திய அமைச்சரவை RPF/RPSF பணியாளர்களைத் தவிர, தகுதியுள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் (Railway Employees) 2020-21 நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் (PLB) க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ALSO READ: ரயில்வே ஊழியர்களுக்கு நற்செய்தி: பம்பர் போனசுக்கு ஒப்புதல் அளித்தது அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News