60 வயதில் கூட Pension திட்டத்தில் சேரலாம். ஒவ்வொரு மாதமும் ரூ. 9000-க்கும் அதிகமான ஓய்வூதியம்

LIC-ன் இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதிலும் மொத்த தொகையை முதலீடு செய்யலாம். முதலீடு செய்த, அடுத்த ஆண்டு முதல், மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 12, 2021, 09:22 PM IST
60 வயதில் கூட Pension திட்டத்தில் சேரலாம். ஒவ்வொரு மாதமும் ரூ. 9000-க்கும் அதிகமான ஓய்வூதியம் title=

Pension Scheme of LIC: பலர் தங்கள் வாழ்நாளில் எதிர்காலம் குறித்து பல திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதில் ஒன்று பென்ஷன் திட்டம். முதுமையில் நாட்களில் ஒரு வழக்கமான வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பென்ஷன் திட்டத்தில் (Pension Scheme) முதலீடு செய்கிறார்கள். ஆனால் சிலர் பணி காரணமாக பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய மறந்து விடுகிறார்கள். அவர்களுக்கு முதுமையில் ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இருப்பினும், அவர்களுக்காக எல்.ஐ.சி (Life Insurance Corporation) ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 

LIC-ன் இந்த திட்டத்தில், நீங்கள் 60 வயதிலும் மொத்த தொகையை முதலீடு செய்யலாம். முதலீடு செய்த, அடுத்த ஆண்டு முதல், மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். எல்.ஐ.சியின் இந்த திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா (Prime Minister Vaya Vandana). இந்த திட்டம் மத்திய அரசின் மானிய உதவியுடன் செயல்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ்  ஓய்வூதியம் வழங்க எல்ஐசி (LIC) நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  உங்கள் பாலிஸி காலாவதியாகிவிட்டதா... LIC கொண்டு வந்துள்ளது சிறப்பு திட்டம்..!!

60 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களுக்குஓய்வூதியம் வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12,000 வரை ஓய்வூதியம் பெற முடியும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

இதில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக (Minimum Pension) மாதத்திற்கு ரூ .1000 பெறலாம். அதாவது ஒருவர் சுமார் ரூ .1.62 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும். அவருக்கு அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ .9250 வரை கிடைக்கும். அதேநேரத்தில் காலாண்டு ஓய்வூதியம் ரூ .27,750, அரை ஆண்டு ஓய்வூதியம் ரூ 55,500 மற்றும் அதிகபட்ச ஆண்டு ஓய்வூதியம் ரூ .1,11,000 இருக்கும். இருப்பினும், இதற்கு ரூ .15.66 லட்சம் முதலீடு (Investment) தேவைப்படும்.

ALSO READ | தினமும் ₹160 முதலீடு செய்தால் போதும், முதிர்வு காலத்தில் கையில் ₹23 லட்சம்!

ஓய்வூதியம் பெறுபவர் ஒரு நிலையான தேதி, வங்கி கணக்கு மற்றும் ஓய்வூதியத்திற்கான காலத்தை தேர்வு செய்ய வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப ஓய்வூதியத் தொகையையும் நீங்கள் தீர்மானிக்கலாம். அதாவது நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டு ஓய்வூதியத்தை விரும்பினால் இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்தத் திட்டத்தை எடுக்கும் முதலீட்டாளர் இறந்துவிட்டால், Purchase Price பரிந்துரைக்கப்பட்டவருக்குத் (Nominee) திருப்பித் தரப்படுகிறது.

இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நேரடியாக எல்ஐசி அலுவலகத்திற்கு சென்றும் இத்திட்டத்தை வாங்கிக்கொள்ளலாம் அல்லது எல்ஐசி இணையதளத்தில் (LIC website) ஆல்லைனிலும் எளிதாக வாங்கிக்கொள்ளலாம். 022-67819281 அல்லது 022-67819290 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இது தவிர, கட்டணமில்லா எண்- 1800-227-717 மற்றும் மின்னஞ்சல் முகவரி: onlinemc@licindia.com ஆகியவை மூலம் தொடர்பு கொண்டு இந்தத் திட்டம் குறித்த தகவல்களைப் பெறலாம்.

ALSO READ | LIC பாலிசி விவரங்களை உங்கள் மொபைலில் பெற இந்த சின்ன வேலைய செஞ்சா போதும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News