உங்கள் பாலிஸி காலாவதியாகிவிட்டதா... LIC கொண்டு வந்துள்ளது சிறப்பு திட்டம்..!!

காலாவதியான பாஸிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி ஜனவரி 7 முதல் மார்ச் 6 வரை சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 8, 2021, 12:27 PM IST
  • எல்.ஐ.சி, ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 9, 2020 வரை இதேபோன்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது.
  • உடல்நலம் தொடர்பான நிபந்தனைகளிலும் சில சலுகைகள் வழங்கப்படும்.
  • தாமதமாக செலுத்துவதற்கான அபராத தொகையும் குறைக்கப்படும்.
உங்கள் பாலிஸி காலாவதியாகிவிட்டதா... LIC கொண்டு வந்துள்ளது சிறப்பு திட்டம்..!! title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பாலிசிதாரர்களுக்கு சில காரணங்களால் காலாவதியான பாலிஸிகளை புதுப்பிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. காலாவதியான பாலிஸிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி வியாழக்கிழமை ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது.

'காலாவதியான பாஸிசிகளை ' புதுப்பிக்க எல்.ஐ.சி (LIC) ஜனவரி 7 முதல் மார்ச் 6 வரையிலான ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ், பாலிஸிதாரர் சில நிபந்தனைகளுடன் காலவதியான பாலிஸியை புதுப்பிக்கலாம். தாமதமாக செலுத்துவதற்கான அபராத தொகையும் குறைக்கப்படும்.

சிறப்பு திட்டம் குறித்த அறிவிப்பு
சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லாத பாலிஸிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி தனது 1,526 சாடிலைட் அலுவலகங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்.ஐ.சி ஒரு அறிக்கையில், "பாலிஸியை புதுப்பிப்பதற்கான சிறப்பு திட்டத்தின் கீழ், சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கூடிய சில தகுதியான பாலிஸிகளை பிரீமியம் செலுத்தாத தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க அனுமதிக்கப்படும்" என்று கூறினார்.

உடல்நலம் தொடர்பான நிபந்தனைகளிலும் சில சலுகைகள் வழங்கப்படும். நல்ல ஆரோக்கியம் மற்றும் கோவிட் -19 குறித்த  கேள்விகளின் அடிப்படையில் மட்டுமே பெரும்பாலான பாலிஸிகளை புதுப்பிக்க அனுமதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்காக ஆகஸ்ட் 10 முதல் அக்டோபர் 9, 2020 வரை இதேபோன்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியது.

பாலிசிதாரர்களுக்கு பாலிஸியை தாமதமாக கட்டுவதற்கான விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது ரூ .2,000 தள்ளுபடி கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டு பிரீமியம் ரூ .1 லட்சம் முதல் ரூ .3 லட்சம் வரை இருக்கும் நிலையில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

ALSO READ | முக்கியமான WhatsApp மெஸ்சேஜ் டிலீட் ஆனதா.. கவலையில்லை..WhatsRemoved+ இருக்கு!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News