ராசிபலன் டிசம்பர் 2, 2021: வியாழக்கிழமையான இன்று ரிஷபம் மற்றும் கடக ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். நாள்பட்ட நோய் சிம்ம ராசிக்காரர்களை தொந்தரவு செய்யலாம். எனவே அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். மிதுனம், விருச்சிகம், கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வியாழன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்...
மேஷம்: உங்களின் தகவல் தொடர்பு திறன் அருமையாக இருக்கும். எனவே, எந்தவொரு புதிய முயற்சிக்கும் இது ஒரு நல்ல நேரம் என்பதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். புதிய உத்திகளை மேற்கொள்வது உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.
ரிஷபம்: குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை ஏற்படலாம். பெற்றோருடன் சில கருத்தியல் வேறுபாடுகள் (Opinion Difference) ஏற்படலாம். காதல் விவகாரங்களுக்கு ஏற்ற காலம் இது. சம்பளம் வாங்குபவர்கள் கடின உழைப்பால் மேலதிகாரிகளை திருப்திப்படுத்தலாம்.
மிதுனம்: உங்களின் சிறப்பான செயல்பாடு மற்றவர்களை கவரக்கூடியது. வழக்கமான வேலையைத் தவிர வேறு ஏதாவது செய்ய முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நாள் ஏமாற்றமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.
ALSO READ | கருடபுராணத்தின் இந்த 7 விஷயங்களை கடைபிடித்தால் நரகமே இல்லையாம்!
கடகம்: பல்வேறு நிலைகளில் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் குழப்பமான நிலையில் இருப்பீர்கள், இந்த சூழ்நிலையால் நீங்கள் சரியான நேரத்தில் வேலையை முடிக்க முடியாது. போதுமான பணம் இல்லாததால் சில திட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்: எலும்புகள் மற்றும் சிறுநீரகங்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு இது கடினமான காலமாக இருக்கும். மூத்த குடிமக்கள் உணர்ச்சிவசப்படுவதையும், நீண்ட பயணங்களையும் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் அமைதியின்மை உங்களை கவலையடையச் செய்யும்.
கன்னி: சிலருக்கு பொருளாதார ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் லாபகரமான பயணங்கள் அமையும். இது இனிமையான அனுபவமாக இருக்கும். முழு நம்பிக்கையும் ஆற்றலும், நல்ல லாபத்தைப் பெற்றுக்கொடுக்கும். குடும்பச் சூழலில் மன அழுத்த சூழ்நிலைகள் இருப்பதால், உங்கள் வெற்றியை குடும்பத்தினரால் முழுமையாக அனுபவிக்க முடியாது.
துலாம்: உங்களின் தொடர்புகள் காரணமாக தொழில், வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் முயற்சிகளில் முழு வெற்றியை அடைவீர்கள். உங்கள் ஆற்றல்கள் அதிகரிக்கும். குடும்பத்தின் பெரியவர்கள் எல்லா முயற்சிகளிலும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு உதவுவார்கள்.
ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!
விருச்சிகம்: வணிக ரீதியாக மிகவும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் பெயரும் புகழும் பரவலாக இருக்கும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிப்பீர்கள், உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
தனுசு: குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். உங்களின் சாதுர்யத்தால் அவர்களிடமிருந்து உதவி பெறுவீர்கள். மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இன்று சற்று சுணக்கமான நாள் என்றாலும், இலக்குகள் மற்றும் லட்சியங்களை அடைவதில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.
மகரம்: இது கலவையான பலன்களைக் கொண்ட காலமாக இருக்கும். இந்த நேரத்தில் கொஞ்சம் கவலைகளும் ஏற்படலாம். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம் நடந்து கொண்டிருக்கும் வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். நிதி சிக்கல்களைத் தீர்க்க சிறிது காலம் ஆகலாம்.
கும்பம்: இந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக வளமாக இருப்பீர்கள். மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும். வியாபாரமும் விரிவடையும். உங்கள் கடின உழைப்பு பலன் தரும். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும்.
மீனம்: அனைத்து நடவடிக்கைகளிலும் பிரகாசிப்பீர்கள், அதிர்ஷ்டம் உங்களைத் தேடித் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு சிறப்பான வேலையும் வெற்றியைத் தரும். வெளியூர் தொடர்பு உள்ளவர்களுக்கு திடீர் அனுகூலங்கள் கிடைப்பதுடன் பயணங்களும் கூடும்.
ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR