உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை தேர்வு செய்வது எப்படி?

காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவது தான். உடல் சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய் சுத்தமும் அவசியம். உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும்.

Written by - RK Spark | Last Updated : Jul 9, 2024, 05:49 PM IST
  • டூத்பேஸ்ட்டில் இவ்வளவு வகைகள் இருக்கிறதா?
  • ஒவ்வொருவருக்கும் ஏற்ற டூத்பேஸ்ட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
  • எப்படி தேர்வு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை தேர்வு செய்வது எப்படி?  title=

தற்போது கடைகளில் பலவகையான டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது உங்களது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும்.

டூத்பேஸ்ட் வகைகள் மற்றும் அவற்றின் நோக்கங்கள்

புளோரைடு டூத்பேஸ்ட்

புளோரைடு டூத்பேஸ்ட் பொதுவாக அனைத்து வயதினரும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் ஆகும். இவை பற்களை வலுப்படுத்தவும், பல் சிதைவை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. இந்த டூத்பேஸ்ட்டை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!

வெண்மையாக்கும் டூத்பேஸ்ட்

இந்த வகை டூத்பேஸ்ட்கள் பற்களை வெண்மையாக்க பயன்படுகின்றன. இவற்றில் அதற்கேற்ற உராய்வுகள் மற்றும் இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை பற்களில் மேற்பரப்பில் படிந்து இருக்கும் கறைகளை நீக்க உதவுகின்றன. இதன் மூலம் கறைகளை நீக்கி வெண்மையான பற்களை பெற முடியும். வெண்மையாக்கும் டூத்பேஸ்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் இயற்கையான வெள்ளை நிற பற்களை பெற முடியும்.

பாக்டீரியா எதிர்ப்பு டூத்பேஸ்ட்

இந்த வகை டூத்பேஸ்ட்டில் இருக்கும் ட்ரைக்ளோசன் அல்லது ஸ்டானஸ் ஃபுளோரைடு போன்ற பொருட்கள் வாயில் இருக்கும் பாக்டீரியாவின் வளர்ச்சியை குறைக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, ஈறுகளில் ஏற்படும் நோயை தடுக்கவும், பிளேக் கட்டமைப்பை கட்டுப்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணர்ச்சி வாய்ந்த பற்கள்

ஒருசிலருக்கு சூடாக அல்லது ஜில் என்று எது சாப்பிட்டாலும் பற்களில் கூசும் தன்மை ஏற்படும். இதற்கு பயந்துகொண்டே இது போன்ற உணவுகளை சாப்பிட மாட்டார்கள். இப்படிப்பட்ட உணர்திறன் வாய்ந்த பற்கள் கொண்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது தான் இந்த வகை டூத்பேஸ்ட். இதில் பொட்டாசியம் நைட்ரேட் சேர்க்கப்படுகிறது. இதனால் பற்களில் ஏற்படும் உணர்திறனை குறைக்க முடியும்.

டார்ட்டர் கட்டுப்பாட்டு

என்னதான் தினமும் காலையில் பல் துலக்கினாலும் பற்களில் பல் கால்குலஸ் உருவாகிறது. எனவே டார்ட்டர் கண்ட்ரோல் டூத்பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். இதில் துத்தநாக சிட்ரேட் சேர்க்கப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதற்கும், பற்களில் இடத்தில் டார்ட்டர் குவிவதைத் தடுக்கவும் உதவும்.

இயற்கை டூத்பேஸ்ட்

இந்த வகை டூத்பேஸ்ட்டில் ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து டூத்பேஸ்ட் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் எந்தவித செயற்கை சுவைகளும், வண்ணங்களும் சேர்க்கப்படுவதில்லை. டூத்பேஸ்ட் பயன்படுத்தினால் வாயில் புண்கள் ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வகை டூத்பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கான டூத்பேஸ்ட்

சிறு குழந்தைகளுக்காக டூத்பேஸ்ட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் அதிகமான ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. மேலும் குழந்தைகள் பல் துலக்கும் போது வெயில் துப்பாமல் விழுங்கும் பழக்கம் கொண்டிருப்பதால் அதற்கேற்றார் போல தயாரிக்கப்படுகின்றன.

ஈறு பராமரிப்பு டூத்பேஸ்ட்

ஈறுகளின் ஆரோக்கியத்தை முறையாக பராமரிக்க இந்த வகை டூத்பேஸ்ட்கள் உதவுகின்றன. இவை ஈறுகளில் ஏற்படும் வீக்கம், இரத்தப்போக்கு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது. மேலும் அதிக உணர்திறன் கொண்டவர்களுக்கும் இவை உதவுகிறது.

புகைப்பிடிப்பவர்களுக்கான டூத்பேஸ்ட்

இந்த வகை டூத்பேஸ்ட்கள் புகைப்பிடிப்பவர்களுக்காக வடிவமைக்கப்படுகிறது. ஏனெனில், இவற்றில் சேர்க்கப்படும் பொருட்கள் பற்களில் ஏற்படும் கறைகளை குறைக்கவும், வாயில் ஏற்படும் நாற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.

மூலிகை டூத்பேஸ்ட்

பொதுவாக மூலிகை டூத்பேஸ்ட்டில் புதினா, வேம்பு, தேயிலை மர எண்ணெய் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அதிக பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால் இயற்கையான சுவாசத்தையும், புத்துணர்ச்சியையும் தருகிறது. உங்கள் வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க சரியான டூத்பேஸ்ட்டை தேர்வு செய்வது அவசியம். உங்களுக்கு பொருத்தமான டூத்பேஸ்ட் எது என்பதை கண்டுபிடிக்க முடியாவிட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க | குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News