மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ!

கார் இன்சூரன்ஸ் திட்டங்கள் மழைக்காலத்தில் அதிகம் உதவுகின்றன. பருவ காலநிலையில் உங்கள் கார் பாதுகாப்பாக இருக்க இந்த இன்சூரன்ஸ் உதவுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Jul 27, 2024, 09:02 PM IST
  • தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது.
  • காரை சேதமடையாமல் பார்த்து கொள்வது அவசியம்.
  • கார் இன்சூரன்ஸ் செலவை குறைக்க உதவுகிறது.
மழைக்காலத்தில் காரை பத்திரமாக பார்த்து கொள்வது எப்படி? எளிய வழிகள் இதோ! title=

மழைக்காலத்தில் ஏற்படும் அதிக தண்ணீர் காரணமாக வெள்ளம், தண்ணீர் தேக்கம் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளது. இதுபோன்ற சவால்களை கார் உரிமையாளர்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டு பருவமழை காலம் தீவிரமடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. மழைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தான். குறிப்பாக மழைக்காலத்தில் கார் இன்சூரன்ஸ் எடுப்பது உங்களு காரை பாதுகாக்க அவசியமான ஒன்று. இதில் என்ஜின் பாதுகாப்பு காப்பீடு, தேய்மானத்திற்கு கழிவு இல்லாத காப்பீடு, டயர் ப்ரொடெக்டர், சேவை உதவி காப்பீடு, வெள்ள நிவாரண உதவி காப்பீடு, EMI பாதுகாப்பு காப்பீடு மற்றும் நுகர்பொருட்களுக்கான காப்பீடு ஆகியவை அடங்கும். ரிலையன்ஸ் ஜெனெரல் இன்சூரன்ஸ் CEO திரு. ராகேஷ் ஜெய்ன் அவர்களின் முன்னெடுப்பில் மழைக்காலத்தின் போது இந்த கேஇன்சூரன்ஸ் காருக்கு ஒரு முழுமையான பாதுகாப்பை எவ்வாறு வழங்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Business Idea: இட்லி, தோசை மாவு தொழில் மூலம் இவ்வளவு லாபம் பார்க்கலாமா?

என்ஜின் பாதுகாப்பு காப்பீடு 

கார் எஞ்சின் மழைக்காலத்தின் போது பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது. தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களில் கார்களை ஓட்டி செல்லும் போது, இஞ்சியில் தண்ணீர் கசிவு ஏற்படும் ஆபத்துகள் அதிகம் உள்ளது. எஞ்சினுக்குள் தண்ணீர் சென்றால் அதனை முழுவதும் சர்வீஸ் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். மேலும் இவை அதிக செலவையும் ஏற்படுத்தும். இது போன்ற சமயத்தில் என்ஜின் பாதுகாப்புக் காப்பீட்டு கார்களுக்கு முக்கியமானது. இதில் இன்ஜின் பழுது நீக்குதல், எஞ்சினை புதிதாக மாற்றுதல் போன்ற செலவுகளை சரி செய்ய முடியும். தண்ணீரால் ஏற்பட கூடிய சேதத்தை முற்றிலும் பாதுகாக்க முடியும். கார் என்ஜின் சேதமடையும் பட்சத்தில், அதை சரிசெய்வதற்கான முழு செலவையும் காப்பீடு நிறுவனங்கள் ஏற்று கொள்ளும். 

rain

தேய்மானத்திற்கு கழிவு

கார் இன்சூரன்ஸ் திட்டங்களில் உரிமையை கோரும் போது 30 சதவீதத்தில் இருந்து 50 சதவிகிதம் தொகை தேய்மானத்திற்காக கழித்துக் கொள்ளப்படும். மீதி இருக்கும் தொகையை வாடிக்கையாளர்கள் கட்டும் நிலை ஏற்படும். மழைக் காலங்களில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. எனவே ஜீரோ டெப்ரிசியேஷன் காப்பீடு என்பது மிக மிக அத்தியாவசியமானது. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் உலோகம் போன்ற உதிரி பாகங்களுக்கு எந்த ஒரு கழிவும் இல்லாத வகையில் முழுத்தொகையும் உங்களுக்கு கிடைப்பதை இது உறுதி செய்கிறது. கூட்டமான இடங்களில் விபத்து ஏற்பட்டால், அப்போது காரின் முன்புற பம்பரில் இருந்து பின்புற பம்பர் வரை சேதமடைந்தால் பிளாஸ்டிக் பாகங்களின் பழுது நீக்குவதற்கு ஏற்படும் மொத்த செலவையும் இந்த காப்பீடு ஈடு செய்து கொள்ளும். 

டயர்

மழைக்காலங்களில் காரில் உள்ள கார்கள் அதிகம் சேதமடைகின்றன. மழைக்காலத்தில் அதிக தேய்மானமடைந்து சேதமடைகின்றன. அவ்வாறு சேதமடைந்த டயர்களில் வெடிப்பு ஏற்பட்டாலும், துளை விழுந்திருந்தாலும் சரிசெய்வதற்கான ஒட்டுமொத்த செலவையும் டயர் ப்ரோடெக்டர் ஆட் ஆன் காப்பீடு வழங்குகிறது. மேலும் தீவிர மழையில் நிலச்சரிவு அல்லது நீர்தேக்கம் போன்ற சந்தர்ப்பங்களில் கார் பழுதடைந்து நின்றால் இந்த சேவை உதவி காப்பீடு பழுது நீக்குவது தொடங்கி சிறு பாகங்கள் பழுதுகளை சரிசெய்வது வரை உதவுகிறது. அதிக நீர் தேங்கிய பகுதியில் உங்கள் கார் சிக்கிக் கொண்டால் ஒரு போன் செய்வதன் மூலம் உதவிகளை பெற முடியும்.

மேலும் படிக்க | Kitchen Hacks: வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு பிரெஷ்ஷாக இருக்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News