பல்வேறு அரசு சேவைகளுக்கு முக்கிய ஆவணமாக மாறியிருக்கும் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள மக்கள் அடிப்படை கட்டணமாக இதுவரை ரூ.50 செலுத்தி வந்தனர். இ-சேவை மையங்களில் இந்த கட்டணத்தை செலுத்தி மக்கள் தங்களுக்கான திருத்தங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இதனை மாற்றியிருக்கிறது இந்திய ஆதார் ஆணையம். இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் UIDAI, மக்கள் இதுவரை ஆதார் சேவை திருத்தங்களுக்காக இ சேவை மையங்களுக்கு சென்று நீங்கள் கட்டணம் செலுத்தி திருத்தங்களை மேற்கொண்டிருந்தால், அந்த கட்டணம் செலுத்தாமலேயே நீங்களாகவே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இது குறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், 90 நாட்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் மக்கள் ஆதார் சேவையில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இந்த அறிவிப்பை தெரிந்து கொண்டால் ஆதார் அட்டையில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை எந்த கட்டணமும் இல்லாமல் மாற்றிக் கொள்ள முடியும். இல்லையென்றால், இணைய சேவை மையங்களில் தேவையின்றி சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆதார் ஆணையத்தின் இந்த இலவச சேவையானது மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை கிடைக்கும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இணைய சேவை மையங்களுக்கு நீங்கள் சென்று புதுப்பிப்புகளை மேற்கொண்டால் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும். நீங்களாகவே myAadhaar போர்டலுக்கு சென்று மேற்கொள்ளும் திருத்தங்களுக்கு மட்டுமே கட்டணமில்லை.
மேலும் படிக்க | ஆதார்-பான் எண் இணைக்கப்பட்டுவிட்டதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?
ஆதார் ஆணையத்தை பொறுத்தவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு, UID-களை புதுப்பிக்காத குடியிருப்பாளர்களுக்கு, மக்கள்தொகை விவரங்களை மறுமதிப்பீடு செய்ய ஆன்லைனில் ஆவணங்களைப் பதிவேற்ற UIDAI அவர்களை ஊக்குவித்து வருகிறது. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் விதிமுறைகளின்படி, 2016; ஆதார் எண் வைத்திருப்பவர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, POI மற்றும் POA ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், குறைந்தபட்சம் ஒரு முறையாவது, ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களைப் புதுப்பிக்கலாம், இதனால், அவர்களின் தகவலின் துல்லியம் தொடர்கிறது.
— PIB India (@PIB_India) March 15, 2023
ஆதார் விவரங்களை எவ்வாறு புதுப்பிப்பது?
* குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/-ல் உள்நுழையலாம்.
* பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும்; ஒருவர் 'ஆவண புதுப்பிப்பு' என்பதைக் கிளிக் செய்தால், குடியிருப்பாளரின் தற்போதைய விவரங்கள் காட்டப்படும்.
* ஆதார் வைத்திருப்பவர் விவரங்களைச் சரிபார்த்து, சரியாகக் கண்டறியப்பட்டால், அடுத்த ஹைப்பர்-லிங்கைக் கிளிக் செய்யவும்.
* அடுத்த திரையில், குடியிருப்பாளர் கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களைத் தேர்வுசெய்து, அதன் நகல்களைப் பதிவேற்றி அவர்களின் ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
* புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய PoA மற்றும் PoI ஆவணங்களின் பட்டியல் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.
பல ஆண்டுகளாக, குறிப்பாக 2015-க்குப் பிறகு, ஆதார் எண் இந்திய குடியிருப்பாளர்களுக்கான உலகளாவிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாளச் சான்றாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 1,200 அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படுகின்றன. அந்தசேவைகளை வழங்குவதற்கு UID அடிப்படையிலான அடையாளத்தைப் அரசு பயன்படுத்துகின்றது.
மேலும் படிக்க | இதுதாங்க இந்தியாவோட விலையுயர்ந்த ரயில், ஒரு டிக்கெட் விலை இவ்வளவு லட்சமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ