Unique Digital Health ID கார்டில் ஏகப்பட்ட நன்மைகள்: முழு விவரம் இதோ

Unique Health Card: தனிப்பட்ட சுகாதார அட்டையில் நபரின் உடல்நிலை தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2022, 01:56 PM IST
  • ஹெல்த் கார்ட் ஒரு முழுமையான டிஜிட்டல் கார்டாக இருக்கும்.
  • நோயாளி தான் சிகிக்கைக்காக செல்லும் அனைத்து இடங்களுக்கும் தனது மெடிகல் கோப்பை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
  • மேலும் இது ஆதார் அட்டையைப் போலவே இருக்கும்.
Unique Digital Health ID கார்டில் ஏகப்பட்ட நன்மைகள்: முழு விவரம் இதோ title=

Unique Health Card: மக்களுக்கு ஒரு இனிய செய்தி!! இனி உங்கள் ஹெல்த் கார்டும் ஆதார் போன்ற எளிமையான முறையில் வழங்கப்படும். டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் கீழ், ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான சுகாதார அட்டையை (Unique Health Card) அரசாங்கம் தயாரித்து வருகிறது. இது ஒரு முழுமையான டிஜிட்டல் கார்டாக இருக்கும். மேலும் இது ஆதார் அட்டையைப் போலவே இருக்கும். 

ஆதார் அட்டையைப் (Aadhaar Card) போலவே, ஹெல்த் கார்டிலும் உங்களுக்கு ஒரு எண் கிடைக்கும். இது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் மக்களை தனித்தனி நபர்களாக, அவர்களது தனித்துவமனான சுகாதார நிலையுடன் அடையாளம் காண உதவும். இதன் மூலம், மருத்துவர்கள் உங்களின் முழுமையான உடல்நலப் பதிவேட்டை எளிதில் அறிந்து கொள்ள முடியும். 

தனிப்பட்ட சுகாதார அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த பிரத்யேக அட்டை மூலம் ஒருவர் எங்கு சிகிச்சை பெற்றார் என்பது தெரியவரும். மேலும், தனிப்பட்ட சுகாதார அட்டையில் நபரின் உடல்நிலை தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். இதன் காரணமாக, நோயாளி தான் சிகிக்கைக்காக செல்லும் அனைத்து இடங்களுக்கும் தனது மெடிகல் கோப்பை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 

மருத்துவர் அல்லது மருத்துவமனை நோயாளியின் தனிப்பட்ட ஹெல்த் ஐடியைப் பார்த்து அதன் மூலம் அவரது நிலையை அறிந்து கொள்ள முடியும். அதன் பின்னர், அவர்கள், அதன் அடிப்படையில் மேலும் சிகிச்சையைத் தொடங்கலாம். இந்த அட்டை மூலம், அந்த நபர் அரசின் திட்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சை வசதிகளின் பலன் நோயாளிக்கு கிடைக்கிறதா இல்லையா என்பது இந்த தனித்துவமான அட்டை மூலம் அறியப்படும்.

ALSO READ |இதையெல்லாம் கண்டிப்பாக செய்யாதீர்கள்: RBI விடுத்த எச்சரிக்கை 

தனிப்பட்ட சுகாதார அட்டையில் என்ன இருக்கும்?

- ஆதார் அட்டையைப் போலவே, தனிப்பட்ட சுகாதார ஐடியின் கீழ், ஒவ்வொரு நபரின் உடல்நலம் தொடர்பான தரவுத்தளத்தை அரசாங்கம் தயாரிக்கும்.
- இந்த அடையாள அட்டையுடன், அந்த நபரின் மருத்துவப் பதிவேட்டில் அனைத்து விவரங்களும் வைக்கப்படும்.
- இந்த ஐடியின் உதவியுடன், ஒரு நபரின் முழுமையான மருத்துவ பதிவைக் காண முடியும்.
- ஒருவர் ஒரு டாக்டரிடம் செல்லும்போது, அவர் தனது ஹெல்த் ஐ.டி-யைக் காட்டுவார். 
- இதற்கு முன் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, எந்தெந்த மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது, எந்தெந்த மருந்துகள் முன்பு கொடுக்கப்பட்டன என்பது தெரிய வரும்.
- இந்த வசதியின் மூலம், அரசு மக்களுக்கு சிகிச்சை போன்றவற்றிலும் உதவ முடியும்.

இந்த விஷயங்கள் ஹெல்த் ஐடியில் பதிவு செய்யப்படும்

- இதில், நபரின் அடையாள அட்டை உருவாக்கப்பட்டு, அவரிடமிருந்து மொபைல் எண், ஆதார் எண் பற்றி தெரியவரும். 
- இந்த இரண்டு பதிவுகளின் உதவியுடன், ஒரு தனிப்பட்ட சுகாதார அட்டை உருவாக்கப்படும்.
- இதற்காக, அரசாங்கம் ஒரு சுகாதார ஆணையத்தை உருவாக்கும். இது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும்.
- ஹெல்த் ஐடி (Digital Health ID Card) தயாரிக்கப்பட வேண்டிய நபரின் சுகாதார பதிவுகளை சேகரிக்க சுகாதார ஆணையத்தால் அனுமதி வழங்கப்படும்.
- இதன் அடிப்படையில் அடுத்த கட்ட பணிகள் நீட்டிக்கப்படும்.
- பொது மருத்துவமனை, சமூக சுகாதார மையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையம் அல்லது தேசிய சுகாதார உள்கட்டமைப்பு பதிவேட்டுடன் இணைக்கப்பட்ட சுகாதார வழங்குநர் ஆகியோர் ஒரு தனிநபரின் சுகாதார ஐடியை உருவாக்க முடியும்.
- உங்கள் சொந்த பதிவுகளை https://healthid.ndhm.gov.in/register இல் பதிவு செய்து உங்கள் ஹெல்த் ஐடியை உருவாக்கலாம்.

ALSO READ | Tax Free EPF: இந்த தொகைக்கு வட்டி செலுத்த வேண்டாம், விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News