அத்தியாவசிய சுகாதார பொருட்கள் விலை விரைவில் குறைக்கப்படும்..!

அத்தியாவசிய சுகாதார பொருட்களான சானிட்டரி நாப்கின்கள், ஹாண்ட் வாஷ், கிருமிநாசினி போன்றவற்றின் விலை விரைவில் குறைக்க வாய்ப்பு!

Last Updated : Aug 25, 2019, 03:12 PM IST
அத்தியாவசிய சுகாதார பொருட்கள் விலை விரைவில் குறைக்கப்படும்..! title=

அத்தியாவசிய சுகாதார பொருட்களான சானிட்டரி நாப்கின்கள், ஹாண்ட் வாஷ், கிருமிநாசினி போன்றவற்றின் விலை விரைவில் குறைக்க வாய்ப்பு!

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 384 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது. இவை, தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயிக்கும்  விலையில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் இந்த பட்டியலை மறுஆய்வு செய்யும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார பொருட்களுக்கு தனி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் அத்தியாவசிய சுகாதார பொருட்களின் பட்டியலை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இரண்டு மாதங்களுக்கு இந்த பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் இருபிரிவுகளாக தயாரிக்கப்பட உள்ளது. இதில் முதல் பிரிவில் இருக்கும் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் இரண்டாவது பிரிவில் இருக்கும் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக துணியை பயன்படுத்தும் வழக்கம் தற்போதும் கிராமங்களிலும் நகரத்தில் ஏழைகளிடத்தில் இருப்பதாகவும், போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் குறைந்த விலையிலான நாப்கின்கள் கிடைக்காததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்வதற்காக நாப்கின்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய சுகாதார பொருட்களும் மலிவு விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பட்டியலை நிதி ஆயோக்கின் மலிவு விலை மருந்துகள் தொடர்பான குழுவின் தலைவர் வி.கே.பால் இறுதி செய்ய உள்ளார்.

 

Trending News