திருமண உறவில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால்... பிரிவதும் நல்லதுதான் - லைப்ப தொலைச்சிராதீங்க!

Relationship Tips: திருமண உறவில் இந்த 5 அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் நீங்கள் பிரிவை நோக்கி தாராளமாக சிந்திக்கலாம். அந்த 5 அறிகுறிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 27, 2024, 11:14 AM IST
  • வீட்டில் நிம்மதி போய்விட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
  • விவாகரத்து என்பது பெரிய குற்றமல்ல.
  • விகாரத்து குறித்து நன்கு யோசித்து, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
திருமண உறவில் இந்த 5 அறிகுறிகள் தெரிந்தால்... பிரிவதும் நல்லதுதான் - லைப்ப தொலைச்சிராதீங்க! title=

Relationship Tips In Tamil: திருமண வாழ்க்கை என்பது ஆண் - பெண் இருவரும் மனம் ஒத்து மேற்கொள்ளும் ஒரு தவம் போன்றது. இந்த தவத்தில் இருவரின் குடும்பங்களும், நண்பர்களும், உறவினர்களும் பெரும் பங்கை வகிப்பார்கள். இந்த உறவுச் சங்கிலி அறுப்படாமல், ஆரோக்கியமான திருமணம் நீடிக்க பல்வேறு காரணிகள் உள்ளன. திருமண உறவில் தம்பதிகளுக்கு இடையிலான புரிதலே அதனை நீடிக்கச் செய்யும் முக்கிய ஒன்றாகும்.

இது ஒருபுறம் இருக்க, திருமண உறவில் புரிதலும் இன்றி, ஒருவருக்கு ஒருவர் பிடிப்பும் இன்றி இருப்பது ஆரோக்கியமானது அன்று. நீண்ட காலமாக ஒரு ஆரோக்கியமற்ற உறவில் இருப்பது நிச்சயம் உங்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையும் சரி, பணி சார்ந்த வாழ்க்கையும் சரி இதனால் பெரிய தாக்கத்தை சந்திக்க நேரிடும். வீட்டில் நிம்மதி போய்விட்டால் அந்த தொலைந்தபோன நிம்மதியை உங்களால் வேறெங்கும் தேடவும் முடியாது, அது கிடைக்கவும் கிடைக்காது. 

விவாகரத்து குற்றமல்ல...

எனவே ஆரோக்கியமற்ற உறவில் நீடிப்பதற்கு பதில் உங்கள் பார்ட்னரிடம் இருந்து சற்று பிரேக் எடுத்துக்கொள்ளலாம். அந்த இடைவெளி உங்கள் இருவருக்குள் சில புரிதல்களை ஏற்படுத்தலாம். இதுவும் உங்களுக்கு பயனளிக்கவில்லை என்றாலோ, அதற்கான காலம் இல்லையென்றாலோ நீங்கள் விவகாரத்து பெறுவதும் நல்லது. விவகாரத்து பெறுவது என்பது ஒரு குற்றச் செயல் ஒன்றும் அல்ல. ஆரோக்கியமற்ற உறவில் இருந்து எதிர்காலத்தை சீரழிப்பதற்கு பதில் அந்த உறவில் இருந்து வெளியேறி, உங்களுக்கான தேவைகளில் நீங்கள் கவனம் செலுத்தலாம். 

இருப்பினும், இது வாழ்வின் மிக முக்கியமான முடிவாகும். எனவே, இதில் அவசரம் காட்டுவதும் தவறாகிவிடும். ஒருவர் திருமண உறவில் இருந்து வெளியேற முடிவெடுத்தால், தான் எடுக்கும் முடிவு சரியா தவறா என்ற குழப்பம் நிச்சயம் அதிகம் இருக்கும். அந்த வகையில், உங்கள் திருமண உறவில் இந்த 5 அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் நீங்கள் பிரிவை நோக்கி தாராளமாக சிந்திக்கலாம். அந்த 5 அறிகுறிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க |  பெண்கள் ஆண்களிடம் இந்த 3 தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்ய வேண்டாம்!

நம்பிக்கையின்மை

உறவுக்கு அடிப்படையான விஷயமே நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையின் மீது திருமண உறவு என்ற கட்டடமே எழுப்பப்பட்டுள்ளது. அந்த அடிதளமே முற்றிலும் தகர்ந்துவிட்டால் திருமண உறவு எப்படி இருக்கும். ஒருவேளை உங்கள் இருவருக்கும், மற்றொருவரின் மீது நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது என்கிறபட்சத்தில் விவகாரத்து குறித்து பார்டனரிடம் கலந்தாலோசிக்கலாம். 

பணத்தால் பிரச்னை

திருமண உறவில் இந்த காலகட்டத்தில் முக்கியமான விஷயம் பொருளாதாரம். ஒருவேளை திருமண உறவில் கணவன் - மனைவி இடையே பணப் பிரச்னை காரணமாக தொடர்ந்து சண்டை வருகிறது என்றாலே அவர்களிடம் பிடிப்பு போய்விட்டது என அர்த்தம். இதுகுறித்து பார்ட்னரிடம் உட்கார்ந்து பேசி நல்ல முடிவை எடுக்கலாம். இல்லாதபட்சத்தில், உறவு முறிவு குறித்தும் நீங்கள் யோசிக்கலாம். 

மனம் விட்டு பேச இயலாதது

திருமண உறவில் மற்றொரு முக்கியமான அம்சம் என்பது தகவல் தொடர்பு. நீங்கள் உங்கள் பார்ட்னரிடம் எந்தளவிற்கு மனம் விட்டு பேசுகிறீர்களோ அந்தளவிற்கு திருமண உறவு பலப்படும். ஆனால், கணவனோ, மனைவியோ உங்களிடம் சரியாக பேசாதது, மனம்விட்டு சில விஷயங்களை பேசாதது, முக்கியமான விவகாரங்களை மறைப்பது போன்றவை கருத்து முரண்பாடுக்கு இட்டுச்செல்லும். மனம் விட்டு பேசுவதே கடினம் என்ற நிலை வந்துவிட்டால், அந்த உறவில் நீடிப்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது.

மரியாதையின்மை

உறவில் ஒருவர் மற்றொருவர் மீது செலுத்தும் மரியாதை என்பது மிக மிக முக்கியமானது. வார்த்தையிலோ அல்லது உடல் ரீதியாகவோ ஒருவர் மற்றொருவரை புண்படுத்தினால் அது ஆரோக்கியமற்ற உறவாகும். உங்களின் சுய மரியாதைக்கு இழுக்கு வரும்பட்சத்தில் உறவில் நீடிப்பதில் அர்த்தமில்லை, விவாகரத்து குறித்து நிசச்யம் யோசிக்கலாம்.

நெருக்கமின்மை

உடல் ரீதியான நெருக்கமோ அல்லது உணர்ச்சி ரீதியான நெருக்கமோ இல்லாவிட்டால் அந்த திருமண உறவு ஆரோக்கியமற்றதாகிவிட்டது என அர்த்தம். திருமண உறவில் ஒருவர் மற்றொருவரின் மீது போதிய கவனம் செலுத்தாவிட்டால் பெரிய பிரச்னை ஏற்படும். இந்த கட்டத்தில் நீங்கள் உறவு முறிவு குறித்தும் நிச்சயம் யோசிக்கலாம். 

(பொறுப்பு துறப்பு: இந்த அனைத்து கருத்துக்களும் பொதுவான தகவல்களாகும். இதனை பின்பற்றுவதற்கு முன் இதுசார்ந்த திருமண உறவு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதற்கு Zee News பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | அரேஞ்ச் மேரேஜ் பண்ண போறீங்களா... திருமணத்திற்கு முன் பார்ட்னரிடம் கேட்க வேண்டிய 4 கேள்விகள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News