வானிலை தகவல்களை உங்கள் விரல் நுனியில் அறிய Mausam app அறிமுகம்!

அரசாங்கத்தின் புதிய பயன்பாட்டு வெளியீடான வானிலை எச்சரிக்கை இப்போது மொபைலில் கிடைக்கிறது

Last Updated : Jul 28, 2020, 02:52 PM IST
வானிலை தகவல்களை உங்கள் விரல் நுனியில் அறிய Mausam app அறிமுகம்! title=

அரசாங்கத்தின் புதிய பயன்பாட்டு வெளியீடான வானிலை எச்சரிக்கை இப்போது மொபைலில் கிடைக்கிறது

'வானிலை செயலி' மூலம், சுமார் 200 நகரங்களின் வெப்பநிலை மற்றும் வானிலை தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள்...!

இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தனது சொந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள சுமார் 450 நகரங்களில் நிகழ்நேர புதுப்பிப்புகள் (real-time updates) மற்றும் எச்சரிக்கைகளை (warnings) வழங்கும், இது அதிகாரப்பூர்வ வானிலை பயன்பாட்டின் முதல் முறையாகும்.

இதற்கு முன், எல்லா பயன்பாடுகளும் கடந்தகால தரவு மற்றும் மழை அவதானிப்புகளைக் காண்பித்தன. ஆனால், இது பயனர்களுக்கு நிகழ்நேர விழிப்பூட்டல்களை வழங்க முடியவில்லை. புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் IMD உருவாக்கியுள்ள 'Mausam' செயலி 200 நகரங்களின் வானிலை அறிக்கையை தினசரி 8 முறை வழங்க உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் 'Mausam' செயலியை அறிமுகப்படுத்தினார். மிதவறட்சி பிரதேசங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம், இந்திய வெப்பமண்டல வானிலை நிறுவனம், இந்திய வானிலை மையம் ஆகியவை கூட்டாக இணைந்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது. இது google play store மற்றும் IOS-ல் கிடைக்கிறது.

சுமார் 200 இந்திய நகரங்களின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட அன்மை வானிலை தகவல்களை வழங்கும். இந்த தகவல்கள் ஒரு நாளைக்கு 8 முறை புதுப்பிக்கப்படும். மேலும், 800 நிலையங்கள் அல்லது மாவட்டங்களின் வானிலையின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப உடனடி தகவல்கள், 3 மணி நேர இடைவெளியில் எச்சரிக்கைகள் போன்றவற்றை வெளியிடும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. இதற்கிடையில், கடுமையான தாக்கம் ஏற்பட்டால், அதன் தாக்கமும் எச்சரிக்கையில் சேர்க்கப்படும். இதன் மூலம் துல்லியமான தகவல்களை நாம் பெறலாம்.

ALSO READ | ரயிலின் கடைசி பெட்டியின் பின்பக்கத்தில் இருக்கும் 'X' குறியீட்டின் ரகசியம் தெரியுமா?

இந்த செயலி இந்தியாவில் சுமார் 450 நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை அடுத்த 7 நாட்கள் என்ற ரீதியில் வழங்கும். கடந்த 24 மணிநேர வானிலை தகவல்களும் செயலியில் கிடைக்கும். மோசமான வானிலை குறித்து எச்சரிக்கும் வகையில் ஒரு நாளைக்கு இருமுறை என அடுத்த 5 நாட்களுக்கு சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற அலெர்ட்களை காட்டும் வசதியும் இதில் உள்ளது. 

பூமி அறிவியல் அமைச்சகத்தின் 14 வது அறக்கட்டளை நாளில் பேசிய MoES மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன், கடந்த இரண்டு ஆண்டுகளில் மழை அளவீடு மற்றும் மேக விதைப்பு குறித்து அரசாங்கம் ஆராய்ச்சி மேற்கொண்டது குறித்தும், காலநிலை கணிப்புகளுக்கு பூமி அமைப்பு மாதிரியைப் பயன்படுத்துவதாகவும் பேசினார். இந்த சோதனைகள் மழைக்காலத்தை சிறப்பாக மதிப்பிடுவதற்கு IMD-க்கு உதவும். மேலும், செயற்கை மழை தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் குறைந்த பருவமழை பெய்யும் பகுதிகளுக்கு உதவக்கூடும் என்று வர்தன் கூறினார்.

இது போன்ற மாதிரிகளை சிறப்பாக ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் கள ஆய்வகம் திறக்கப்படும். போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மையத்தில் மற்றொரு சோதனை மாதிரியான "வளிமண்டல சோதனை படுக்கைகள்" இருக்கும். அனைத்து தரவு பதிவு மற்றும் பகுப்பாய்வு தானியங்கி செய்யப்படும். "இது பருவமழை மேகங்களையும் மழைக்காலத்தையும் நன்கு புரிந்துகொள்ள வழிவகுக்கும்" என்று வர்தன் கூறினார்.

Trending News