மகளிர் தினம் ஸ்பெஷல்: பெண்மையைப் போற்றும் படங்கள் ஒரு பார்வை!

அனைத்துலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8-ம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கருப்பு வெள்ளை படங்கள் தொட்டு, சமீபத்தில் வெளியான அருவி வரை பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு அதிக மவுசு.

Updated: Mar 8, 2018, 02:47 PM IST
மகளிர் தினம் ஸ்பெஷல்: பெண்மையைப் போற்றும் படங்கள் ஒரு பார்வை!

அனைத்துலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8-ம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கருப்பு வெள்ளை படங்கள் தொட்டு, சமீபத்தில் வெளியான அருவி வரை பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு அதிக மவுசு.

அந்த வகையில் பெண்களை மையமா வெச்சு வந்த சில படங்களைப் பார்ப்போம்:-

அவள் ஒரு தொடர்கதை

அவள் ஒரு தொடர்கதை 1974-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா நடித்திருந்தார். கமலஹாசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்து, நூறு நாட்கள் திரையிடப்பட்டத் தமிழ் திரைப்படங்களுள் ஒன்று. பல போராட்டங்களை சந்திக்கும் ஒரு நர்ஸ். குடும்பம், ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் விவாகாரத்து என போராட்டங்களை ஒரு சேர சந்திக்கும் பெண் அவளது வாழ்வு எனற அடிப்படையில் கொண்டது இப்படத்தின் கதை.

புதுமைப் பெண்

புதுமைப் பெண் 1984 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம். பாண்டியன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ராஜசேகர் இப்படத்தில் எதிர் நாயகனாக அறிமுகமானார். ஏவிஎம் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பிராமணப் பெண்ணான ரேவதியை வங்கி ஊழியரான பாண்டியன் காதலித்து திருமணம் செய்கிறார். ஏழை வீட்டுப் பெண்ணான ரேவதியை பாண்டியனின் தாயிக்கு பிடிக்கவில்லை. ரேவதியை காணவரும் அவரின் தந்தை அவரிடம் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து இதிகாச புனித நூல்களைத் தந்து இதிகாச காலத்து பத்தினி பென்களைப் போல வாழுமாறு அறிவுரை கூறிச் செல்கிறார். பாண்டியன் பணியாற்றும் வங்கியின் மேலாளரான ராஜசேகர் ஒரு காமுகன். அவனுக்கு ரேவதி மிது ஒரு கண், இந்நிலையில் வங்கியில் பண பரிமாற்றத்தின்போது ஏற்பட்ட ஒரு சிக்கலால் கணக்கில் பணம் குறைகிறது இதற்கு காரணம் பாண்டியன் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிக்கலுக்கு ஆளாகிறார். இந்த சமயத்தை பயன்படுத்தி ராஜசேகர் பாண்டியனிடம் அவனுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் அதற்கு விலையாக ரேவதியுடன் உறவு கொள்ள அனுப்புமாறு கேட்கிறான். இதனால் கோபமுற்ற பாண்டியன் மேலாளரை தாக்குகிறார். மேலாளரை கொண்ற குற்றத்துக்கு பாண்டியன் கைது செய்யப்படுகிறார். இதன் பிறகு தன் கணவன் பாண்டியனைச் சிறையிலிருந்து விடுவிக்கப் படாத பாடு படுவார் ரேவதி. வெளியே வரும் கணவன் தனது நடத்தையைச் சந்தேகப்படும்போது, தன் தந்தை தந்த இந்து புனித நூல்களை குழிதோண்டி புதைத்துவிட்டு புயலாகப் பொங்கி எழுந்து படிதாண்டுவார்.

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாதவன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளிவந்த தமிழ் படம். எம்.டி.சியாமா (நந்திதா தாஸ்) இலங்கையில் தனது கணவனுடன் வசித்து வருகிறார். அப்போது போர் நடக்கும் எச்சரிக்கை வருகிறது. அப்போது அவர்கள் படகில் ஏற்றிவிடப்பட்டு ராமேஷ்வரம் செல்கிறார்கள். தனது கணவன் இலங்கை இராணுவத்திடம் மாட்டிக் கொண்டதால் தன்னுடன் தன் கணவனை அழைத்து செல்ல முடியாத அவள் தனியாக செல்கிறாள். ராமேஷ்வரத்தில் அகதிகள் முகாமில் அவளுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த பெண் குழந்தையை திருச்செல்வமும் (மாதவன்) இந்திராவும் (சிம்ரன்) தத்தெடுத்துக் கொள்கின்றனர். இக்குழந்தை உரிய வயதை எய்தியதும் பெற்றோர்கள் இவளிடம் தத்தெடுக்கப்பட்ட விபரத்தைக் கூற, இவள் பல விதமான உணர்ச்சித் தத்தளிப்புகளுக்கு ஆளாகிறாள். தன் பிறப்புத் தாயைக் காண இவள் பேரவா கொள்வதால், இவள் பெற்றோர் இவளை இலங்கைக்கு அழைத்துச் செல்கின்றனர். பெருமுயற்சிக்குப் பின் அவள் தாய் விடுதலைப்புலி போராளி என அறிந்து அவளைச் சந்திக்கின்றனர். தன் தாயை இவள் அமைதி நிலவும் தமிழகத்துக்கு அழைக்கின்றாள். தாய் மறுத்து விடுகின்றாள்.

அபியும் நானும்

அபியும் நானும் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரகாஷ் ராஜ் தயாரிப்பிலும் ராதா மோகன் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரிஷா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சிறப்புத் தோற்றதில் பிரிதிவிராஜ் நடித்துள்ளார். 

அழகி

அழகி 2002-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சண்முகமும் (பார்த்திபன்) தனலட்சுமி (நந்திதா தாஸ்) இருவரும் சிறுவயதில் கிராமச் சூழலில் படித்த மாணவர்கள் தனலக்ஸ்மியை பலமுறை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும் சண்முகம் அவர் மீது காதல்கொண்டிருந்தார், தனலக்ஸ்மியும் அவர் மீது காதல் கொண்டிருந்தார் ஆனால் குடும்பச் சூழல்கள் காரணமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.தனலட்சுமி ஏழைக் குடியானவனைத் திருமணம் செய்து மிகுந்த இன்னல்களிற்குள் தள்ளப்படுகின்றார். ஆனால் சண்முகமோ வசதி படைத்தவராக வளர்மதி (தேவயானி) என்ற பெண்ணை மணம் செய்து மனநிறைவுடன் வாழ்கின்றார்.திடீரென ஒரு நாள் தனலட்சுமியை ஏழ்மை நிலையில் பார்த்துவிட்ட சண்முகம் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்து வேலை ஒன்றும் பெற்றுத் தருகின்றார்.இதன் பின்னர் சண்முகம் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் திரைக்கதையின் முடிவாகும்.

மொழி 

மொழி, 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம். எசு. பாசுகர் முதலானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மெல்லிய நகைச்சுவை இழையோடும் உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் இப்படம் அறியப்பட்டது. இசையமைப்பாளர் ஒருவருக்கும் (பிரித்விராஜ்) வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் (ஜோதிகா) இடையில் மலரும் நேசத்தைச் சுற்றி திரைப்படம் நகர்கிறது.

ஆரோகணம்

ஆரோகணம் 2012ல் வெளிவந்த திரைப்படமாகும். இதை எழுதி இயக்கியிருப்பவர் லட்சுமி இராமகிருஷ்ணன். இப்படத்தில் விஜி சந்தரசேகர், உமா பத்மநாபன், மாரிமுத்து, ஜெயப்பிரகாசு போன்றோர் நடித்துள்ளனர். இருமுனையப் பிறழ்வினால் பாதிக்கப்பட்ட தாயை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

36 வயதினிலே

36 வயதினிலே ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்திலும், சூர்யா, தயாரிப்பிலும் வெளியாகியுள்ள திரைப்படம். இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர்ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சந்தோஷ் நாராயணனின் இசையிலும், ஆர். திவாகரனின் படத்தொகுப்பிலும் மே 2015 திரையரங்குகளில் வெளியானது. குடும்பத்தின் பொருட்டு தன் கனவுகளையும் அடையாளத்தையும் இழந்துவிடும் மகளிர், குடும்ப வட்டத்தில் பொறியில் சிக்கியது போன்ற வாழ்விற்கு தள்ளப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பலவற்றையும் இழக்கிறார்கள்.[3] தன்னை இழந்து கணவன் குழந்தை என குடும்பத்துக்காக வாழும் ஒரு பெண். அவள் தன் குழந்தையாலும், கணவனாலும் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு நிலை. இச்சூழலில் அவள் எப்படி தன்னை அறிந்து, உணர்ந்து ஒரு பெரும் மதிப்பைப் அடைகிறாள் என்பதே இத்திரைப்படத்தின் கதை. கல்லூரியில் படிக்கும் காலத்தில் எதையும் எதிர்கொண்டு எதிர்த்துப் போராடுகிற பெண், ஒரு நிலையில் தன்னை இழந்துவிட்டதை நன்கு உணரும் அவள் தன் 36-ம் அகவையில் தன்னைக் மீளவும் காண்கிறாள்.

இறுதிச்சுற்று 

இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்கத்தில், சி. சசிகாந்த், சி. வி. குமார் (தமிழ்), மாதவன் (இந்தி), ராஜ்குமார் கிரானி (இந்தி) ஆகியோரின் தயாரிப்பில், மாதவன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் தமிழிலும் இந்தியிலும் வெளியான இருமொழித் திரைப்படம். இத்திரைப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 2014-ல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, 2016-ல் திரையரங்குகளில் வெளியானது. மகளிருக்கான குத்துச்சண்டைப் பயிற்றுனராக அரியானாவில் வேலை செய்தவர் பிரபு செல்வராஜ் (மாதவன்). குத்துச்சண்டைக் கூட்டமைப்பின் தலைவருடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். பிரபு செல்வராஜின் மனைவியும் அவரைப்பிரிந்து சென்றுவிடுகின்றார். சென்னையில் ஒரு குத்துசண்டை வீரரை உருவாக்கிக் காட்டுகிறேன் என்ற சூளுரையுடன் சென்னைக்கு வருகிறார். ஒரு நிகழ்வில் எழிலரசியை (ரித்திகா சிங்) சந்திக்கும் அவரை தரமான குத்துச்சண்டைப் பயிற்சியை அளித்து எப்படியாவது தனது இலக்கை நிறைவேற்றிக் கொள்ள எண்ணுகிறார். உள்ளூரில் மீன் விற்பவராக வரும் எழிலரசியை ஒப்புக்கொள்ள வைத்து வைத்து பணம் கொடுத்து பயிற்சி கொடுக்கின்றார் பிரபு செல்வராஜ். ஒரு சூழலில் எழிலரசி மீது இருந்த நம்பிக்கையை இழந்தும் விடுகின்றார். இடையூறுகள், தோல்விகள், தடைகள், சறுக்கல்கள் பல ஏற்படுகின்றன. எழிலரசி மீண்டும் பிரபு செல்வராஜூடன் இணைந்தாரா? எழிலரசி சண்டையின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பெற்றாரா? பிரபு செல்வராஜ் தன் இலக்கை அடைந்தார? என்பதே மீதிக்கதை.

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும் 2017-ல் வெளியான திரைப்படமாகும். பிரம்மா இயக்கும் இத்திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்திலும், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸ்டன் ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். சூர்யா தயாரித்த இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் 15 திரைக்கு வந்தது. 

அறம்

அறம் 2017-ல் ந. கோபி நயினார் இயக்கத்தில் வெளியான திரைப்படமாகும். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ள இத்திரைப்படத்தில், காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். உலகம் முழுதும் 2017 நவம்பர் 10 அன்று வெளியானது. அறம் படமும் மக்களின் முக்கியப் பிரச்சினையைத்தான் பேசுகிறது. தமிழகத்தின் வடக்கு எல்லையில் உள்ள காட்டூர் ஒரு பக்கா கிராமம். குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத அந்த கிராமத்தில் வாழ்க்கையோடு போராடுகிறது சுனு லட்சுமியின் குடும்பம். வேலைக்குப் போகும்போது கூடவே நான்கு வயது மகளையும் அழைத்துப் போகிறாள் சுனுலட்சுமி. அங்கு தோண்டப்பட்டிருக்கும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை விழுந்துவிட, குழந்தையை மீட்கும் பணிக்கு நேரடியாக மாவட்ட ஆட்சியரான நயன்தாராவே வந்துவிடுகிறார். பொதுமக்கள், சக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், மீடியா பரபரப்புகளைத் தாண்டி அவரால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் மீதி.

அருவி

அருவி 2017-ல் வெளிவந்துள்ள சமூக-அரசியல் கதைக்களமுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் ஆவார். இத்திரைப்படம் அருவி (அதிதி பாலன்) என்ற பெண் பாத்திரப்படைப்பின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளைச் சித்தரிக்கும் திரைப்படம் ஆகும். இந்தப் பாத்திரப்படைப்பானது, நுகர்வியம் மற்றும் பெண் வெறுப்பு கொண்டுள்ள நவீன பண்பாட்டின் இயல்பிலிருந்து வெளிப்பட விழைகின்ற ஒரு ஒரு புரட்சிகரமான இளம்பெண்ணைச் சித்தரிப்பதுடன், சமகாலத்திய இருத்தலியலின் நெருக்கடி நிலையின் பொருளை விளங்கிக்கொள்ளும் முயற்சியையும் மேற்கொள்கிறது. இத்திரைப்படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் உலகலாவிய அளவில் 2017-ம் ஆண்டு திசம்பர் 15 வெளியிடப்பட்டுள்ளது. ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண், பொருளாதார-சமூக-நுகர்வியல் சூழலில் சமூகத்தில் தன்னைப் பொருத்திக் கொள்வதில் சிரமத்தை உணர்கிறாள். கதையின் நாயகி, இதற்குக் காரணமாக இருக்கும் சமூகத்திற்கெதிராக கடுமையாக எதிர்வினையாற்ற முடிவெடுக்கிறாள். அவள் எத்தகைய எதிர்வினையாற்றினாள் என்பதை திரைக்கதையின் மீதம் சொல்கிறது. அருவி திரைப்படம் ஒரு பெண் சமூகத்தால் பெறும் கடும் வேதனையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.