IRCTC E-Wallet: இனி டிக்கெட் முன்பதிவினை சுலபமாக நொடியில் செய்யலாம்

IRCTC வழங்கும் இ-வாலட் வசதியின்   மூலம் இனி மிக எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2022, 01:44 PM IST
  • முன்பதிவு செய்யும் போது பேமெண்ட் கேட்வே தொடர்பான தொல்லைகள் இருக்காது.
  • இ-வாலட்டின் பயனர் சரிபார்ப்புக்கு, பான் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடுவது அவசியம்.
  • இ-வாலட்டில் குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும்.
IRCTC E-Wallet: இனி டிக்கெட் முன்பதிவினை சுலபமாக நொடியில் செய்யலாம் title=

IRCTC eWallet: ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய IRCTC உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மிக எளிதாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். IRCTC வாடிக்கையாளர்களுக்காக இ-வாலட் (IRCTC e-Wallet) வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள் IRCTC கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து டிக்கெட்டுகளை மிக எளிதாக முன்பதிவு செய்யலாம். இது ஒரு வகையான டிஜிட்டல் வாலட்.

IRCTC eWallet பாதுகாப்பாகவும், மிக விரைவாக பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது. இது தவிர, முன்பதிவு செய்யும் போது பேமெண்ட் கேட்வே தொடர்பான தொல்லைகள் நீங்கி, நொடியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்தும் போது OTP பெறுவதில் தாமதம் ஏற்படுதக் போன்ற சிக்கல்கள் நேரும் சமயத்தில், இது உங்களுக்கு பெரிதும் உதவும்.

IRCTC eWallet-ல் உள்ள சிறப்பு அம்சங்கள்:

இ-வாலட்டின் பயனர் சரிபார்ப்புக்கு, பான் அல்லது ஆதார் எண்ணை உள்ளிடுவது அவசியம்.

டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பரிவர்த்தனை கடவுச்சொல்/பின் எண்ணை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகுதான் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

இந்த வாலட்டின் மூலம், நீங்கள் எவ்வளவு தொகைக்கு முன்பதிவு செய்துள்ளீர்கள் என்ற தகவல்களை எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | Indian Railways: 5 இலக்க ரயில் எண்ணில் புதைந்துள்ள தகவல்கள்!

IRCTC eWallet-ல் பணத்தை டெபாசிட் செய்யும் முறை:

முதலில் பயனர் IRCTC இ-வாலட்டில் உள்நுழையவும்.

பின்னர் உங்களுக்கு தேவையான தொகையை உள்ளிடவும்.

இப்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணப்பையில் பணத்தைச் சேர்க்கவும்.

இதற்குப் பிறகு பணம் IRCTC இ-வாலட்டில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் விதம்

இ-வாலட் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, முதலில் IRCTC ஐடியை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். இதற்குப் பிறகு, 'பிளான் மை டிராவல்' என்ற பக்கத்தைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது இ-வாலட் பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் உங்கள் பான் அல்லது ஆதார் விவரங்களை நிரப்ப வேண்டும்.

இறுதியாக, ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.50 வரை டெபாசிட் செய்யவும். இதற்குப் பிறகு, இ-வாலட்டில் குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்யுங்கள். முன்பதிவு விவரங்களை உள்ளிட்டு இரண்டு நிமிடங்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News