நமக்கு எது நன்மையோ, அதைத்தான் இறைவன் தந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்!
இது முற்றிலும் தவறான கருத்து. அமாவாசை நாளில் குழந்தை பிறப்பதால் குடும்பத்திற்கு ஆகாது என்ற கருத்தில் உண்மை இல்லை. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. இறைவனின் (God) எண்ணப்படியே இந்த உலகம் இயங்குகிறது. நமக்கு எது நன்மையோ, அதைத்தான் இறைவன் தந்து கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று இருந்துவிட்டால் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆஞ்சநேயர் (Hanuman) அவதரித்தது அமாவாசையில், கிருஷ்ணர் பிறந்தது அஷ்டமியில், ராமர் பிறந்தது நவமியில் . அமாவாசை நாளில் (New Moon Day) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே வீட்டில் அமர்ந்திருப்பர். லக்ன பாவத்திலிருந்து சூரியனும், சந்திரனும் இணைந்திருக்கின்ற பாவகத்தின் தன்மையைப் பொறுத்து பலன் மாறுபடும். அது நற்பலனைத் தருவதாகவும் இருக்கலாம். பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ஜாதகம் (jathagam) பார்ப்பது தவறு.
ALSO READ | இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
மேலும், ஒரு குழந்தை பிறந்த நேரத்தினால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் உண்டாகாது. அவரவர் ஜாதக பலனே அவரவருக்கு உரிய பலனைத் தரும். அமாவாசையில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR