ரிலைன்ஸ் ஜியோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது...!
அம்பானி தலைமையில் செயல்படும் ஜியோ நிறுவனம், கடந்த சில நாட்களாக தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை இலவசமாக வழங்குவதாக மை ஜியோ (My jio) செயலியில் வெளியிட்டது. அதில் "ஒரு வருடதிற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சலுகையை பெற தயாராகுங்கள்" என கூறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த பேனரில் "Coming soon" என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஜியோ நிறுவனம் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாக்களை வழங்கி வந்தது, ஆனாலும் ஆண்டுக்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவை ஜியோ பயனர்கள் பெறவுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டகாசமான சந்தா பிரத்யேக ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்கள் மற்றும் கிரிக்கெட், ஃபார்முலா 1 பிரீமியர் லீக் உள்ளிட்ட நேரடி விளையாட்டுகளுடன் டிஸ்னி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் கிட்ஸ் உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கொண்டுவரும். பின்பு ஜியோ நிறுவனத்தின வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்றால், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஜபி சந்தாவை ஒரு வருடத்திற்கு வழங்க உள்ளது.
READ | செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது: மத்திய அரசு
இதில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் செயலி மூலம் கிரிக்கெட் தொடர்கள், லைவ் ஸ்போர்ட்ஸ், நெடுந்தொடர்கள், செய்திகள், ஹாலிவுட் படங்கள், சிறுவர்களுக்கான அனிமேடட் சீரியஸ், போன்றவை தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வழங்குவர். மேலும் பிரீமியம் சந்தாவில், இதனுடன் ஆங்கில மொழிகளில் வரும்.
இதற்க்கு முன்னே கடந்த மாதம் ஏர்டெல் நிறுவனம் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வழங்கியது. அந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, 28 நாட்களுக்கு 3 ஜிபி அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குகிறது. மேலும் இதில் பயனர்கள் எந்த அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் சலுகைகளையும் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜியோ அளிக்கும் சேவைகள் பற்றி இன்னும் தெரியவில்லை.