கடலோர காவல் படையில் வேலை - 300 காலி பணியிடங்கள்

இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 12, 2022, 01:28 PM IST
  • இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
  • 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • செப்டம்பர் 22ஆம் தேதி கடைசி நாளாகும்
 கடலோர காவல் படையில் வேலை - 300 காலி பணியிடங்கள்  title=

இந்திய கடலோர காவல் படையில் வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் பெறப்பட்டுவருகிறது. 

கடலோர காவல் படை காலி பணியிடங்கள்:

Navik (General Duty) – 225 

Navik (Domestic Branch) – 40 

Yantrik (Mechanical) – 16 

Yantrik (Electrical) – 10 

Yantrik (Electronics) – 09 என்ற எண்ணிக்கையில் காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 22 வயதிற்கு கீழ் உள்ளவராகவும் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:

Navik (General Duty) பணிக்கு அரசு அல்லது CBSE அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ஆம் அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | இந்த காரணங்களால் உங்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்

Navik (Domestic Branch) பணிக்கு அரசு அல்லது COBSE அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Navik (General Duty) பணிக்கு ரூ.21,700 என்றும், Navik (Domestic Branch) பணிக்கு ரூ.21,700 என்றும், Yantrik பணிக்கு ரூ.29,200 என்றும் மாத சம்பளமாக பெறுவார்கள்.

மேலும் படிக்க | பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு NABARD வங்கியில் வேலைவாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி உள்ளிட்ட முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினர் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22ஆம் தேதிக்குள் https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News