கார்த்திகை மாதம்: துன்பம் அகல, செல்வம் பெருக கை கொடுக்கும் கார்த்திகை மாதம்

நமது வாழ்வை ஒளிமயமாக ஆக்கும் மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகின்றது. இருளை போக்கி ஒளியை பரப்பி, மங்கலங்களை அதிகரிக்கும் மாதம் கார்த்திகை மாதம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2021, 10:42 AM IST
கார்த்திகை மாதம்: துன்பம் அகல, செல்வம் பெருக கை கொடுக்கும் கார்த்திகை மாதம் title=

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. அந்த வகையில், நமது வாழ்வை ஒளிமயமாக ஆக்கும் மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகின்றது. இருளை போக்கி ஒளியை பரப்பி, மங்கலங்களை அதிகரிக்கும் மாதம் கார்த்திகை மாதம்!!

ஆலயங்களுக்கு (Temples) செல்வது நம் மனதிற்கு நிம்மதியையும், பரவசத்தையும் அளிக்கும் ஒரு விஷயமாகும். கார்த்திகை மாதத்தில் ஆலயங்களுக்குச் செல்வது நாம் அடையும் நன்மைகளை பன்மடங்காக அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

ஒளியின் மாதமான கார்த்திகை மாதத்தில் தினமும் மாலை விளக்கேற்றி இறைவனை வணங்கினால், நாம் செய்த வினைகளெல்லாம் அகன்று இறை சக்தி நம்மையும் நம் சுற்றத்தையும் காக்கும். 

புராணங்களில் படி, கார்த்திகை மாதம் பல சிறப்பம்சங்களைக் கொண்டது. கார்த்திகை பௌர்ணமியில்தான் சிவபெருமான், விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதி ஸ்வரூபனாய், அக்னிப்பிழம்பாய் காட்சியளித்தார்.  

ஈசனை நோக்கி தவம் புறிந்த பார்வதி தேவி, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் ஈசனது இடபாகத்தை அடைந்தாள். 

ALSO READ:Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகள், ஜாக்கிரதை 

காத்திகை மாதத்தில் இவற்றை செய்தால் எண்ணற்ற மகிழ்ச்சியும், புகழும் செல்வமும் உங்களைத் தேடி வரும்:

- கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து இறைவனை வணங்கினால், வாழ்வில் உள்ள அனைத்து துயரங்களும் ஒளியைக் கண்ட இருளைப் போல அகலும்.

- கார்த்திகை மாதத்தில் பிறருக்கு அகல் விளக்கு வாங்கிக்கொடுத்தால், கொடுப்பவரின் பிள்ளைகள், அவரது சந்ததி நற்கதி அடையும்.

- சிவபெருமான் (Lord Shiva), மகாவிஷ்ணு என இருவருக்கும் உகந்த மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் செய்யும், சிவ பூஜைக்கும் விஷ்ணு பூஜைக்கும் பன்மடங்கு பலன் கிடைக்கும்.

- கார்த்திகை மாத துவாதசி நாளில் அன்னதானம் செய்தால், வீட்டில் செல்வம் பெருகும்.

- ஆலயங்களுக்கு விளக்கு வாங்கி கொடுத்தால், வீட்டில் உள்ள சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

- கார்த்திகை மாத துவாதசி நாளில் மகாவிஷ்வுடன் (Mahavishnu) துளசி தேவியின் விவாகம் நடந்தது. ஆகையால், கார்த்திகை மாதம் முழுவதும் துளசி கொண்டு மகா விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்தால், வீட்டில் நிலையான பணவரவும், மகிழ்ச்சியும் இருக்கும்.

- கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நதிகளில் நீராடினால், நவகிரக தோஷம் நீங்கும், பிரம்மஹத்தி தோஷம், தெரியாமல் செய்த திருட்டு, பிறருக்கு செய்த துரோகம் ஆகியவற்றால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

- கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு அவர் நினைவுடன் இருந்தால், நம் வாழ்வில் நம்மை ஆட்கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அவரது அருட்பார்பை சரி செய்யும். தீராத பிரச்சனைகளும் தீர்ந்து போகும்.

ALSO READ:Horoscope: பிறந்த தேதியின்படி உங்கள் ஆளுமைத்திறன் எவ்வாறு அமையும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News