கொல்கத்தா - கொச்சி: இனி ஓரே விமானத்தில் போகலாம்!

விஸ்தாரா ஏர்லைன்ஸ், கொல்கத்தாவிலிருந்து புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது! 

PTI | Updated: Feb 23, 2018, 05:28 PM IST
கொல்கத்தா - கொச்சி: இனி ஓரே விமானத்தில் போகலாம்!

புது டெல்லி: விஸ்தாரா ஏர்லைன்ஸ், கொல்கத்தாவிலிருந்து புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது! 

வரும் மார்ச் 25- ஆம் தேதி முதல், கொல்கத்தாவில் இருந்து சென்னை மற்றும் சென்னை மார்கமாக கொல்கத்தாவில் இருந்து கொச்சிக்கும் புதிய விமான வழி சேவைகளை தொடங்கியுள்ளது.

டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடையேயான கூட்டு நிறுவனமான விஸ்டாரா, கொல்கத்தா மற்றும் டெல்லி இடையே சேவையின் எண்ணிக்கைகளையும் கூட்டியுள்ளது.

இந்த சேர்க்கைகளுடன், விஸ்தாரா கொல்கத்தாவை டெல்லி, சென்னை, போர்ட் பிளேர் (ஆடம்மான்ஸ்) மற்றும் கோச்சியுடன் நேரடியாக இணைக்கவுள்ளது. 

கொல்கத்தாவிலிருந்து டெல்லியினை இணைக்கும் வழித்தடத்தில் சண்டிகர், ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ் மற்றும் லக்னோ உள்பட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களையும் விஸ்தாரா இணைக்கவுள்ளது.

மேலும் கொல்கத்தாவிலிருந்து விரைவில் புதிய புதிய பாதைகளை விஸ்தாரா  அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது!