குளத்தில் குளிக்கும் போது ஆணுறுப்பு வழியாக உடலுக்குள் நுழைந்த அட்டை பூச்சி..!

ரத்தத்தை உறிஞ்சும் உயிரினமான அட்டை பூச்சி ஒருவரின் ஆணுறுப்பு வழியாக நுழைந்து ரத்தத்தை உறிஞ்சி அசுரவேகத்தில் வளர்ந்த பூச்சி..! 

Last Updated : Jun 30, 2020, 02:23 PM IST
குளத்தில் குளிக்கும் போது ஆணுறுப்பு வழியாக உடலுக்குள் நுழைந்த அட்டை பூச்சி..! title=

ரத்தத்தை உறிஞ்சும் உயிரினமான அட்டை பூச்சி ஒருவரின் ஆணுறுப்பு வழியாக நுழைந்து ரத்தத்தை உறிஞ்சி அசுரவேகத்தில் வளர்ந்த பூச்சி..! 

கம்போடியா புனோம் பென்னில் வசிக்கும் முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அருகே இருந்த குளத்தில் ஆடையின்றி நீந்தி குளித்துள்ளார். அப்போது அவர் ஆணுறுப்பு காயமடைந்து ரத்தம் வந்துள்ளது. ஏதேனும், பூச்சி கடித்திருக்கும் என்று நினைத்த முதியவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் என்று செய்தி அறிக்கை கூறுகிறது. மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து அவரது ஆணுறுப்பில் வலி இருந்துள்ளது. இதையடுத்து சிறிய கேமிரா வழியாக சிறுநீர்ப்பையை மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர். இதன் மூலம் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்துள்ளது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளது. அந்த அட்டை பூச்சி 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சியதால் அதனை வெளியேற்ற மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். ஒரு நாள் முழுவதும் முதியவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின் அவர் குணமடைந்து உள்ளார். பொதுவாக மழைகாலங்களில் நீர்நிலைகளில் பூச்சிகள் நிறைந்திருக்கும். அதனை பயன்படுத்தும் போது கவனமுடன் இருக்க வேண்டும். நீர்நிலைகளில் குளித்த பின் உங்கள் உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டடால் மருந்துவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர்.

READ | இந்தியாவில் #GooglePay செயலி தடை செய்யப்படுகிறதா?.. உண்மை என்ன..

மேலும், அந்த முதியவரை தங்களது மருத்துவமனை கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர் குணமடைந்து அவரது வீட்டிற்க்கு  சென்றுள்ளார். கம்போடியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Trending News