பாரம்ரியமாக விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த நாம், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் சமைக்கும் முறைகளும் மாறிவிட்டன. இன்னும் பலர் பாரம்பரிய முறைப்படி சமைத்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில் சீக்கிரம் சமைக்க மைக்ரோவேவ் பயன்படுத்துவதும் அதிகரித்துவிட்டது. ஆனால் இதில் இருக்கும் கேள்வி என்னவென்றால் உணவுகளை பாரம்பரிய முறைப்படி சமைப்பது நல்லதா?, மைக்ரோவேவ் மூலம் சமைப்பது நல்லதா? என்பது தான். உணவின் ஊட்டச்சத்துகளை பாதுகாப்பதில் எந்த சமையல் சிறந்தது என்பது குறித்து உணவியல் நிபுணர் டாக்டர் சைலா கதோஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க | திருமண உறவில் புரிதலை அதிகமாக்க... தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?
மைக்ரோவேவ் எப்படி உணவை சமைக்கிறது?
மைக்ரோவேவ் உணவை எலக்ட்ரோமாக்னடிக் அலைகளைப் பயன்படுத்தி வேகமாக சமைக்கிறது. பாரம்பரியமாக நமது சமையல் முறைகள் பொரித்தல், காய்ச்சுதல் போன்றவை உணவின் சத்துக்களை ஒரு விதத்தில் குறைக்கலாம். காய்கறி உள்ளிட்டவற்றை சிறிய துண்டுகளாக வெட்டும் பொழுதும் சத்துக்கள் குலைவது தென்படுகிறது. ஆனால், மைக்ரோவேவ் பயன்படுத்தும் போது இவ்வாறு சத்துக்கள் குலைவது குறைவாகவே இருக்கும்.
மைக்ரோவேவில் பாதுகாக்கப்படும் சத்துக்கள்:
உணவில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு, புரதம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் மைக்ரோவேவில் பாதுகாக்கப்படுகின்றன. மைக்ரோவேவ் குறைந்த நேரத்தில் உணவை சமைக்கின்றதால், அதிக சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை கூட மைக்ரோவேவில் சமைக்கும் போது பாதுகாப்பாக இருக்கும்.
சத்துக்களை பாதுகாக்க மைக்ரோவேவ் சிறந்ததா?
எப்படி சமைத்தாலும் உணவில் இருக்கக்கூடிய சத்துகள் உண்பவருக்கு கிடைக்கும். ஆனால், மைக்ரோவேவில் சமைப்பது பாரம்பரிய சமையல் முறைகளைவிட சத்துக்கள் குறைவாக பாதிக்கப்படும். சத்துக்கள் அழியாமல் இருக்கும் என்றே உணவியல் நிபுணர் சைலா கதோஜன் கூறுகிறார். குறிப்பாக, பான் அல்லது அடுப்பில் மீண்டும் சூடாக்குவதைக் காட்டிலும் மைக்ரோவேவில் மீண்டும் சூடாக்குவது அதிக சத்துக்களைப் பாதுகாக்க உதவும். அதனால், பாரம்பரிய சமையல் முறைகள் உணவின் சத்துக்களை குறைக்கலாம், மைக்ரோவேவ் சத்துகளை பாதுகாப்பதில் சிறந்ததாகவே இருக்கிறது. இதில் உங்களுக்கு எது பெஸ்ட் என தோன்றுகிறதோ அதனை பயன்படுத்துங்கள்.
சமைக்கும் முறைகளில் கவனம் :
சமைக்கும்போது எல்லா காய்கறி, பழங்களையும் சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். பழைய அல்லது பூஞ்சை தொற்றுள்ள காய்கறிகள் இருந்தால் அதனை பயன்படுத்தாதீர்கள். தூக்கி போட்டுவிடுங்கள். என்ன சமைக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து அதற்கேற்ப சுவையாக சமைத்து சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள்
மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ