வைரலாகும் ''மிஸ் இந்தியா'' அழகியின் டப்ஸ்மாஷ் வீடியோ!

இந்திய அழகிக்கான தேர்வு போட்டி நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. இந்த "மிஸ் இந்தியா" போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியா'' வாக முடி சூட்டப்பட்டுள்ளார். இவருக்கு தமிழகத்தை சேர்ந்த பலர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Last Updated : Jun 20, 2018, 03:00 PM IST
வைரலாகும் ''மிஸ் இந்தியா'' அழகியின் டப்ஸ்மாஷ் வீடியோ! title=

இந்திய அழகிக்கான தேர்வு போட்டி நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. இந்த "மிஸ் இந்தியா" போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியா'' வாக முடி சூட்டப்பட்டுள்ளார். இவருக்கு தமிழகத்தை சேர்ந்த பலர் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற "மிஸ் இந்தியா" வில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 30 பேரில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 19-வயது நிறைத்த அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். இந்த "மிஸ் இந்தியா" போட்டியில் 2ம் இடத்தில் ஹரியானாவின் மீனாட்சி, 3ம் இடத்தில் ஆந்திராவின் ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, ''மிஸ் இந்தியா'' பட்டம் பெற்ற தமிழ்மங்கை அனுகீர்த்தி வாஸ் இந்த வருட இறுதியில் நடக்கும் உலக அழகிப்போட்டியில் பங்கேற்கிறார். மேலும் இவரை விரைவில் திரைப்படங்களில் நாயகியாக பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ''மிஸ் இந்தியா'' அனுகீர்த்தி வாஸ் டப்ஸ்மாஷ் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

For chennai

A post shared by Anukreethy Vas (@anukreethy_vas) on

 

 

 

Trending News