தமிழக முதல்வருடன் "மிஸ் இந்தியா" அனுகீரித்தி சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்திய அழகிக்கான தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற அனுகிரீத்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Last Updated : Jul 2, 2018, 04:03 PM IST
தமிழக முதல்வருடன் "மிஸ் இந்தியா" அனுகீரித்தி சந்தித்து வாழ்த்து பெற்றார்! title=

இந்திய அழகிக்கான தேர்வு போட்டியில் வெற்றி பெற்ற அனுகிரீத்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய அழகிக்கான தேர்வு போட்டி கடந்த ஜூன் 19ம் தேதி மாலை மும்பையில் நடைபெற்றது. இந்த "மிஸ் இந்தியா" போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழக மங்கையான அனுகீர்த்தி வாஸ் ''மிஸ் இந்தியா'' வாக முடி சூட்டப்பட்டார்.  

"பெமினா மிஸ் இந்தியா" வில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 30 பேரில் தமிழகத்தை சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  19-வயது நிறைத்த அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். 

இந்த நிலையில், மிஸ் இந்தியா அனுகிரீத்தி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்திய அழகி அனுக்ரீத்திக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூக்கூடை கொடுத்து வாழ்த்தினார்.

 

 

Trending News