புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 மருந்துகளின் விலையை 87 சதவீதம் வரை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி விலைக்குறைப்பு அமலுக்கு வந்துள்ளதை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்கு அந்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பிற மருத்துவச் செலவுகளை விட புற்றுநோயாளிகளுக்கு இரண்டரை மடங்கு மருந்து செலவு அதிகமாவதைக் கருதி ஏற்கெனவே கடந்த 27-ம் தேதி புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 42 மருந்துகளின் விலையை மத்திய அரசு வர்த்தக இலக்கு இடைவெளியை 30 சதவீதத்துக்கு கீழ் குறைத்தது.
இதனைத் தொடர்ந்து புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 390 பட்டியலிடப்படாத மருந்துகளின் விலையை 87 சதவீதம் வரை குறைத்துள்ளது. இது மொத்தமுள்ள புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் 426 மருந்துகளில் 91 சதவீதம் ஆகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள 22 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு 800 கோடி ரூபாய் வரை செலவு மிச்சமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட மருந்துகளின் முழு விவரங்களை nppaindia.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
மேலும், இரசாயன மருந்துகள் மற்றும் உரங்களின் அமைச்சகத்தின் கீழ் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) 390 புற்றுநோயற்ற, அல்லாத திட்டமிடப்பட்ட மருந்துகளின் பட்டியலை வெளியிட்டது, அதன் MRP க்கள் 87% வரை குறைக்கப்பட்டுள்ளன. வர்த்தக வரம்பை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியாளர்களும் மருத்துவமனைகளும் விலைகளை திருத்தியமைக்க வேண்டும் என அமைச்சகம் விரும்புகிறது. உற்பத்தியாளர்களால் வெளியிடப்பட்ட 426 பிராண்டுகளின் மொத்தம் 390 பிராண்டுகள் அல்லது 91%, கீழ்நோக்கி விலைக் குறைப்பைக் காட்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
NPPA தற்போது மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணைகள் (DPCO) இன் 1 வது அட்டவணையின் கீழ் அத்தியாவசிய மருந்துகளின் தேசிய பட்டியலில் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கிறது.