முடி உதிர்தல் பிரச்சனையால் பாதிக்கப்படுவோர் பலபேர் உள்ளனர். இவர்களுக்கு தனது முடியை எப்படியாவது நீளமாக வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும் யோசனை இல்லாமல் இருப்பர். நம் உடலுக்கு இயற்கை வைத்தியங்கள் எப்படி நன்மை பயக்கிறதோ அதே போல நமது முடிக்கும் சில மூலிகைகள் நன்மை பயக்கும். அவை என்னென்ன மூலிகைகள் தெரியுமா?
நீண்ட மற்றும் ஆரோக்கியமான முடியை பராமரிக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் இயற்கையான பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றை நம் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக மூலிகைகள் போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. நெல்லிக்காய், வேப்பிலை போன்ற மூலிகைகள் உங்களது முடியை வலுப்படுத்த உதவும்.
நெல்லிக்காய்:
நெல்லிக்காயில் ஆயுர்வேத மூலிகைகள் நிரம்பி இருக்கின்றன. இதில் வைட்டமின் சி சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், முடியை அடர்த்தியாக்கும் சத்துக்களும் முடி வளர்ச்சிக்கு உதவும் சத்துக்களும் இதில் அதிகமாக இருக்கின்றன. நெல்லிக்காயை எண்ணெய், டீ உள்ளிட்ட பல வகைகளில் செய்து நமது முடியை வலுபெற செய்யலாம்.
பிருங்கராஜ் எண்ணெய்:
பிருங்கராஜை மூலிகைகளின் ராஜா என்று பலர் குறிப்பிடுவதுண்டு. இதன் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு உதவி புரிவது மட்டுமன்றி முடி உதிராமலும் தடுக்கிறது. மேலும், உச்சந்தலைக்கு ஊட்டமளித்து ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதனால் முடி வேகமாக வளர்ந்து, அடர்த்தி குறையாமல் இருக்கும்.
வெந்தயம்:
வெந்தயத்தில் புரோட்டீன்கள் மற்றும் நிகோடினிக் சத்துக்கல் அதிகளவில் உள்ளன. இவை முடிக்கு நன்மை பயக்கும்
வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் அதிகரிக்கும். மேலும், இவை தலையில் உள்ள மயிர்க்கால்களை வலுப்படுத்துகின்றன, முடி உடைவதைத் தடுக்கின்றன. மேலும், முடிக்கு பிரகாசத்தையும் சேர்க்கின்றன. வெந்தய விதைகளை ஒரே இரவில் ஊறவைத்து, பேஸ்டாக அரைத்து பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்ச் பழத்தை சாப்பிட வேண்டாம்!
கற்றாழை:
கற்றாழை சாற்றை நேரடியாக உச்சந்தலையில் தடவுவது, ரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை நாம் பேனலாம். இதில் உள்ள pH அளவுகள், உச்சந்தலையில் வீக்கத்தைக் குறைத்து மற்றும் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும். மேலும், இது ஒரு இயற்கை கண்டீஷனராகவும் உபயோகிக்கப்படுகிறது.
செம்பருத்தி:
செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் ஆகிய இரண்டிலுமே வைட்டமின் சத்துக்கள் மற்றும் அமினோ ஆசிட் சத்துக்கள் இருக்கும். இது, உங்கள் முடிக்கு ஊட்டமளிக்கவும், முடி வளரவும், முடி கொட்டாமல் தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இயற்கை சத்துக்கள் முடியை மென்மையாக மாற்றவும் ஊக்கமளிக்கிறது. செம்பருத்தியால் ஹேர்மாஸ்க், எண்ணெய் ஆகியவற்றை உருவாக்கலாம். இதிலிருந்து சீரம் கூட செய்கின்றனர். செம்பருத்தியால் முடி வேகமாக வளர வாய்ப்பிருக்கிறது.
வேப்பிலை:
வேம்பு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ள மூலிகையாகும். உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க வேப்பிலை சிறந்த மூலிகையாகும். இது உச்சந்தலையை சுத்தப்படுத்தி, பொடுகு வராமல் தடுக்கவும் சிகிச்சையளிக்கிறது. முடியை மேம்படுத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. தலையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. வேப்ப எண்ணெய் அல்லது வேப்பிலை கலந்த பொருட்களை பயன்படுத்துவதால் முடிக்கு நல்ல ஊட்டமளிக்கும் சத்துக்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க | இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை வேகமாக குறையுமா? பதில் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ