டிசம்பர் 1 முதல் உயரும் புதிய Mahindra Tha SUV; இன்று பழைய விலையில் முன்பதிவு செய்யலாம்

உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) டிசம்பர் 1 முதல் நியூ மஹிந்திரா தார் 2020 விலையை அதிகரிக்க உள்ளது. 

Written by - ZEE Bureau | Last Updated : Nov 30, 2020, 08:05 PM IST
  • டிசம்பர் 1 முதல் நியூ மஹிந்திரா தார் 2020 விலையை அதிகரிக்க உள்ளது.
  • இன்று முன்பதிவு செய்வதன் மூலம் பழைய விலைக்கு இந்த கார்களை வாங்கலாம்.
  • புதிய மஹிந்திரா தார் 2020 மாடலின் 20,000 க்கும் மேற்பட்ட யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • டெலிவரி செய்ய வாடிக்கையாளர்கள் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
டிசம்பர் 1 முதல் உயரும் புதிய Mahindra Tha SUV; இன்று பழைய விலையில் முன்பதிவு செய்யலாம்

புதிய மஹிந்திரா தார் 2020: புதிய மஹிந்திரா தார் (New Mahindra Thar) மற்றும் இந்த எஸ்யூவி (SUV Cars) கார்களை வாங்க நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) டிசம்பர் 1 முதல் நியூ மஹிந்திரா தார் 2020 விலையை அதிகரிக்க உள்ளது. இன்று முன்பதிவு செய்வதன் மூலம் பழைய விலைக்கு இந்த கார்களை வாங்கலாம். இல்லையென்றால், நாளை முதல் நீங்கள் இந்த புதிய எஸ்யூவி கார்களை புதிய விலையில் தான் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். Rushlane செய்தியின்படி, மஹிந்திரா நிறுவனம் தனது தற்போதைய வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் மூலம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

ஏழு முதல் எட்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்:
புதிய மஹிந்திரா தார் 2020 மாடலின் 20,000 க்கும் மேற்பட்ட யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக முன்பதிவு காரணமாக, நிறுவனம், புதிய மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை விரைவாக அறிமுகபப்டுத்துவதில் காலதாமதம் ஆகிறது. இந்த எஸ்யூவி காரை உங்களுக்கு டெலிவரி செய்ய வாடிக்கையாளர்கள் ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். செய்திப்படி, நிறுவனம் டிசம்பர் 1, 2020 முதல் புதிய முன்பதிவுக்கான விலையை மாற்றப்போகிறது.

ALSO READ |  65 முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் மாருதி கார்கள்! எப்படி எங்கு வாங்க முடியும்?

புதிய மஹிந்திரா தார் 2020 விலை (Mahindra Thar 2020 Price List)

AX Std Fixed Soft Top
Thar Petrol - Rs 9.80 lakh 

AX Fixed Soft Top
Thar Petrol – Rs 10.65 lakh 
Thar Diesel – Rs 10.85 lakh 

AX (O) Convertible Soft Top 
Thar Petrol – Rs 11.90 lakh 
Thar Diesel – Rs 12.10 lakh 

AX (O) Hard Top
Thar Diesel – Rs 12.20 lakh 

ALSO READ |  அரசு ஊழியர்களுக்கு அடித்தது யோகம்: Maruti Suzuki அளிக்கிறது Special Offers!!

LX Convertible Soft Top
Thar Petrol - Rs 13.45 lakh (AT) 
Thar Diesel - Rs 12.85 lakh/ Rs 13.65 lakh (AT) 

LX Hard Top
Thar Petrol - 12.49 lakh/ Rs 13.55 lakh(AT) 
Thar Diesel - Rs 12.95 lakh/ Rs 13.75 lakh (AT) 

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மஹிந்திரா தார் 2020 மாடல் குளோபல் என்சிஏபி (Global NCAP Test) சோதனையில் 4 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அதாவது, இந்த எஸ்யூவி கார்கள் மற்ற கார்களை காட்டிலும் அதிக அளவில் தரத்தை பூர்த்தி செய்கிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News