லூயிஸ் சயனோர் என்ற மூதாட்டி தனது 107-வது வரை தான் அழமாக இருக்க என்ன காரணம் என்பதை மக்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்!!
மானிடனாய் பிறந்த அனைவருக்கும் தான் நீண்டகாலம் வாழவேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அப்படி, நீங்கள் நீண்ட காலம் வாழ விரும்பினால், நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த லூயிஸ் சிக்னோர் வழங்கிய ஆலோசனையை கடைபிடியுங்கள். இது உண்மையில் எளிது எளிதானது. என்னவென்றால், நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். ஜூலை 31 அன்று லூயிஸ் 107 வயதை எட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்தவர் லூயிஸ் சயனோர். இளம் வயதிலிருந்தே நடனத்தின் மீது தீராக் காதல் கொண்டு வளர்ந்தவர் இன்று வரையில் தினமும் தனது நடனப் பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார். நடனம், ஆரோக்கிய உணவு மட்டும் அல்லாது இன்னொரு சீக்ரெட்டும் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்கிறார் லூயிஸ்.
Happy birthday to #CoopCity's oldest resident, Louise Jean Signore, who turned an amazing 107 years old today!
Thank you @JASAseniors for holding this wonderful birthday party in her honor. #Bronx pic.twitter.com/bO3stFP2fE
— Eliot Engel (@RepEliotEngel) July 31, 2019
”எனது நீண்ட ஆரோக்கிய வாழ்வுக்குக் காரணமே நான் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதுதான். சிறு வயதிலிருந்தே நண்பர்கள் உடன் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். சொந்தங்களும் எனக்குத் துணையாக இருக்கிறார்கள்” என்கிறார் லூயிஸ்.
வயோதிகத்தில் வரும் பிரச்னைகளான கண் பார்வை மங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் லூயிஸ்-க்கும் உள்ளது. ஆனாலும் அளவான ஆரோக்கியமான உணவுடன் தினமும் நடனம் ஆடுவதே தனக்கு மிகப்பெரும் பலத்தை அளிப்பதாகக் கூறுகிறார்.