நாளை ஹோலி! டெல்லியில் மெட்ரோ சேவை பிற்பகல் 2.30 மணி வரை ரத்து

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை பிற்பகல் 2.30 மணி வரை டெல்லியில் மெட்ரோ சேவை ரத்து செய்யப்படுகிறது.

Last Updated : Mar 20, 2019, 10:44 AM IST
நாளை ஹோலி! டெல்லியில் மெட்ரோ சேவை பிற்பகல் 2.30 மணி வரை ரத்து title=

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை பிற்பகல் 2.30 மணி வரை டெல்லியில் மெட்ரோ சேவை ரத்து செய்யப்படுகிறது.

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஹோலிப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் பெரியோர் முதல் சிறியவர் வரை வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பரஸ்பரம் பூவதும், பல வண்ணங்கள் கலந்த நீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் வழக்கம்.

இதனைத் தொடர்ந்து நாளை ஹோலி பண்டிகை முன்னிட்டு டெல்லியில் முழுவதும் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை பிற்பகல் 2.30 மணி வரை தில்லியில் மெட்ரோ சேவை ரத்து செய்யப்படுகிறது. 

Trending News