LIC-ல் வேலை இல்லை; அதிர்ச்சியில் தமிழக இளைஞர்கள்!

LIC நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு எந்த வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

Last Updated : Jul 24, 2018, 01:45 PM IST
LIC-ல் வேலை இல்லை; அதிர்ச்சியில் தமிழக இளைஞர்கள்! title=

LIC நிறுவனத்தில் இருந்து தற்போதைக்கு எந்த வேலைவாய்ப்பு குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில், LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக செய்திகள் பரவி வந்தன. இந்த செய்தியானது பொய் செய்தி எனவும், தற்போதைக்கு நிறுவனத்தில் இருந்து உதவி நிர்வாக அதிகாரி பணியிடத்திற்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை எனவும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது LIC.

முன்னதாக பணியிட வாய்ப்பு குறித்து வெளியான அறிவிப்பில் 700 உதவி நிர்வாக அதிகாரி பணியிடம் இருப்பதாகவும், இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 15-ஆம் நாளுக்குள் www.licindia.in என்னும் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த செய்தியினை பொய் செய்தி என அறிவித்துள்ள LIC நிறுவனம், பணியிடங்கள் குறித்த அறிவிப்பினை செய்திதாள்களிலும், LIC-ன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலும் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Trending News