174 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக இந்தியர் இரயில்களில் மசாஜ் மையங்களை திறக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது!
நெடுந்தூரம் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதுவாக மசாஜ் சென்டர்களை ஓடும் ரயில்களிலேயே அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. விமானங்களில் மூச்சு திணறல் ஏற்படுவதால் நோயாளிகள் பலர் ரயில்களிலேயே நீண்ட தூர பயணங்களை கடக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் தற்போது நீண்ட தூர பயணிகளுக்கு கலைப்பு தெரியாமல் இருக்க இரயில்களிலேயே மசாஜ் சென்டர்களை கொண்டு சேவை செய்ய இந்திய இரயில்வே முன்வந்துள்ளது. கோல்ட், டைமண்ட் மற்றும் பிளாட்டினம் என மூன்று வகைகளில் கிடைக்கும் இந்த மசாஜ் வசதி இரயில்களில் இரவு 10 மணி துவங்கி காலை 6 மணி வரை கிடைக்கும் என தெரிவிக்கிப்பட்டுள்ளது.
சுமார் 15-லிருந்து 20 நிமிடங்கள் கிடைக்கெப்பறும் இந்த மசாஜ் சேவைக்கு 100-லிருந்து 300 வரை வசூளிக்கப்படுகிறது.
அடத்த 15 அல்லது 20 நாட்களில் நடைமுறைக்கு வரும் இந்த சேவை முதற்கட்டமாக இந்தூரில் இருந்து மத்தியபிரதேசம் செல்லும் 39 இரயில்களில் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த இரயில்களில் 5 மசாஜ் ஊழியர்கள் வரை பயணிப்பர் எனவும், இந்திய ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளை அணிந்திருப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளில் வேண்டுகோள் பேரிலும், வருமாணத்தை பெருக்குதல் என்பதின் அடிப்படையிலும் இத்தகு சேவை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளதாக இரயில்வே துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு 20 லட்சம் வரை வருமானம் உயர்ந்து 90 லட்சம் வரை லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.