Railway Jobs: 10வது படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? இதோ…

பத்தாவது படித்தவரா? உங்களுக்கு ரயில்வேயில் வேலை காத்துக் கொண்டிருக்கிறது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 3, 2021, 08:47 PM IST
  • 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு
  • 10வது படித்தவரா?
  • உங்களுக்கான வேலை காத்துக் கொண்டிருக்கிறது
Railway Jobs: 10வது படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை வேண்டுமா? இதோ… title=

பத்தாவது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது. அக்டோபர் 4 முதல் ரயில்வே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும், இதோ உங்களுக்கான விவரங்கள்…  

அண்மையில் இந்திய ரயில்வே வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, பத்தாம் வகுப்புப் படித்தவர்களுக்கு ரயில்வேயின் ஹவுரா, சீல்டா, அசன்சோல், மால்டா, காஞ்ச்ராபரா, லில்வா மற்றும் ஜமால்பூர் பிரிவுகளில் உள்ள பயிற்சிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.

இந்திய ரயில்வேயில் வேலை பார்க்க விரும்பும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி இது. கிழக்கு ரெயில்வேயில் கிழக்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பயிற்சிக்கு பம்பர் ஆட்சேர்ப்பு எடுக்கப்பட்டுள்ளது. 3366 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும். அறிவிப்பின் படி, ரயில்வேயின் ஹவுரா, சீல்டா, அசன்சோல், மால்டா, காஞ்ச்ராபரா, லிலுவா மற்றும் ஜமால்பூர் பிரிவுகளில் அப்ரெண்டிஸ்ஷிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளது.

ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட், கிடைத்து DA Hike, அரியர் தொகை

இந்தப் பணியிடங்களுக்கு (Indian Railway Recruitment 2021) விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்திய ரயில்வேயின் www.rrcer.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அக்டோபர் 4ம் தேதியன்று தொடங்குகிறது. 2021 நவம்பர் 3ம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள், விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அடிப்படை கல்வித் தகுதியாகும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்ச வயது 24. தகுதியின் அடிப்படையில் பயிற்சிக்கு பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவார்கள். 

இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் பொதுப் பிரிவினர் 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWBD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ALSO READ: 7th Pay Commission: DA, DR குறித்து அரசின் தலையீட்டை நாடிய ஓய்வூதியர் சங்கம், விவரம் இதோ

எந்த பகுதிகளில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:

மால்டா பிரிவு - 100 பணியிடங்கள்
காஞ்சராபர பிரிவு - 190 பணியிடங்கள்
லிலுவா பிரிவு - 204 பணியிடங்கள்
ஜமால்பூர் பிரிவு - 678 பணியிடங்கள்
ஹராரா பிரிவு - 659 பணியிடங்கள்
சீல்டா பிரிவு - 1123 பணியிடங்கள்
அசன்சோல் பிரிவு - 412 பணியிடங்கள்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுங்கள் பத்தாம் வகுப்பு படித்தவர்களே!

Also Read | 7th Pay Commission: தீபாவளிக்கு முன் மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News