புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் அவரது மனைவி சானியா மிர்ஸாவை ஸ்டார் ஜோடி என்று அனைவரும் அழைக்கின்றனர். சர்வதேச அளவில் புகழ் பெற்ற இரண்டு உச்ச விளையாட்டுத்துறை பிரபலங்களின் திருமணம் 2010 ஆம் ஆண்டில் நடந்தது.
ஷோயிப் அக்தர், சானியாவை மிகவும் விரும்பினார். அவர் தனது காதலை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தார். திருமணத்திற்கு முன்பு ஷோயிப் மட்டுமே தன்னுடைய திருமண பந்தத்தை முறித்துக் கொண்டாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சானியா மிர்ஸாவுக்கு ஷோரப் மிர்ஸாவுடன் (Sohrab Mirza) திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. சானியாவின் நண்பரும், குடும்ப நண்பருமான ஷோரப் மிர்ஸாவுடன் திருமணம் உறுதி செய்யப்பட்டு, நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. ஆனால், சானியாவுக்கும் ஷோரப் மிர்ஸாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது, காதல் எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
Read Also | Happy Birthday Dhoni: கிரிக்கெட் நாயகன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஷோயப்பிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தது, சானியாவை திருமணம் செய்யப் போகிறபோது தான் தெரியவந்தது. இந்த திருமணம் குறித்து ஷோயபின் முதல் மனைவிக்கு ஆட்சேபனை இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஷோய்பின் முதல் மனைவியின் பெயர் ஆயிஷா சித்திகி (Ayesha Siddiqui). 2002 ஆம் ஆண்டில், ஷோயிப் மற்றும் ஆயிஷாவுக்கு திருமணம் நடைபெற்றது. சானியாவுடன் ஷோயபுக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டபோது, கணவன் மனைவிக்கு இடையே மனவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சானியா மிர்ஸாவை திருமணம் செய்வதற்காக, ஷோயிப் ஆயிஷாவை விவாகரத்து செய்ய வேண்டிய சூழல் உருவானது.
இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா ஸ்டைலானவர் மட்டுமல்ல, மிகவும் அழகானவரும் கூட. தன்னுடைய டென்னிஸ் திறமைக்காக மட்டுமல்ல, தன்னுடைய மனம் மயக்கும் அழகிய தோற்றத்திற்காகவும் அறியப்பட்டவர் சானியா. ஆனால் சானியா மிர்ஸாவை விட, ஷோயப் மாலிக்கின் முதல் மனைவி ஆயிஷா சித்திகி அதிக அழகானவர் என்பது மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். ஆயிஷா மீது ஷோயிபுக்கு காதல் இருந்தது. ஆனால், திருமணத்திற்கு பின் காதலின் வேகம் மட்டுப்பட்டு சானியாவை பார்த்ததும் மனைவி மீதான காதல் கசந்துவிட்டது. காலப்போக்கில் ஷோயிப்புக்கும், ஆயிஷாவுக்கும் இடையிலான பிளவு அதிகமாக சானியா காரணமாகிவிட்டார்.
Read Also | BCCI தலைவர் சவுரவ் கங்குலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்...!
ஒரு கட்டத்தில் சானியாவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமானால், மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. ஆயிஷாவை விவாகரத்து செய்த 4 நாட்களுக்குப் பிறகு, சானியாவை திருமணம் செய்துக் கொண்டார் ஷோயிப்.
சானியா மிர்ஸா நாடறிந்த டென்னிஸ் நட்சத்திரம் அல்ல, உலகப் புகழ் பெற்றவர். சானியா பல பிராண்டுகளின் தூதராக இருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தின் பிராண்ட் தூதராகவும் இருக்கிறார் சானியா மிர்ஸா. திருமணமாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஷோயிப் - சானியா தம்பதிகள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளனர். 2018 அக்டோபர் மாதம், சோனியா-ஷோயப் மாலிக்கிற்கு ஆண் குழந்தை பிறந்தது. விளையாட்டு ஸ்டார் ஜோடியின் வாரிசின் பெயர் இஷான் மிர்ஸா மாலிக் ஆகும்.