வங்கியின் பிக்ஸட் டெபாசிட் அல்லது டெர்ம் டெபாசிட் என்பது ஒரு சிறந்த முதலீட்டு முறையாகும். வங்கியில் இத்தகைய எஃப்டிக்கள் மூலம் முதலீடு செய்வது பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை பெற வழிவகுக்கிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனது எஃப்டியை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. வங்கி எஃப்டி கணக்கில் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்து உங்கள் அசல் தொகைக்கு நிலையான வட்டியைப் பெறலாம். இது தவிர, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு எஃப்டி செய்திருந்தால் நீங்கள் வரி விலக்கு பெறலாம். எஸ்பிஐ அதன் வாடிக்கையாளருக்கு 5 ஆண்டு எஃப்டிக்கு, 5.50 சதவீத வருடாந்திர வட்டியையும், மூத்த குடிமகனுக்கு 6.30 சதவீதத்தையும் செலுத்துகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ளதா பழைய ஓய்வூதிய திட்டத்தின் நன்மைகள்?
எஃப்டி கால்குலேட்டரின் படி, நீங்கள் 5 ஆண்டுகளுக்கு 10 லட்ச ரூபாய் மொத்த வைப்புத்தொகையை எஸ்பிஐயில் டெபாசிட் செய்தால், அந்த கால முடிவில் உங்களுக்கு ரூ.13,14,067 கிடைக்கும், இதோடு 3.14 லட்சம் ரூபாய் வட்டி கிடைக்கும். அதேசமயம் நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால், 10 லட்ச ரூபாய் எஃப்டிக்கு ஐந்து வருட முடிவில், 13,66,900 ரூபாய் கிடைக்கும். இதில் வட்டி மூலம் ரூ.3,66,900 வருமானமும் கிடைக்கும்.
மேலும் எஸ்பிஐ வங்கியானது மூத்த குடிமக்களுக்கான 'எஸ்பிஐ வீகேர்' எனும் சில்லறை டெர்ம் டெபாசிட் / ஃபிக்ஸட் டெபாசிட்டில் திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் எஃப்டி கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு 0.50 சதவிகிதத்துடன் கூடுதலாக 0.30 சதவிகிதம் அதாவது 0.80 சதவிகிதம் கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை செப்டம்பர் 30, 2022 வரை வங்கி நீட்டித்துள்ளது. வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட் அல்லது டெர்ம் டெபாசிட் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எஃப்டியில் 5 ஆண்டுகளுக்கான வரி சேமிப்புக்கு பிரிவு 80C இல் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், எஃப்டி மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
மேலும் படிக்க | Mutual Funds: பாதுகாப்பான முறையில் பணத்தை அள்ளலாம்: எளிய முதலீட்டு டிப்ஸ் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR