வாட்ஸ்அப்பில் இருந்து கூகுள் பே-வுக்கு பணம் அனுப்புவது எப்படி?

வாட்ஸ்அப்பில் இருந்து கூகுள் பே-வுக்கு நீங்கள் பணம் அனுப்ப முடியும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 26, 2022, 06:37 PM IST
வாட்ஸ்அப்பில் இருந்து கூகுள் பே-வுக்கு பணம் அனுப்புவது எப்படி? title=

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அம்சமான வாட்ஸ்அப் வழியாக பயனர்கள் இப்போது UPI மூலம் பணத்தை மாற்றலாம். புழக்கத்தில் இருக்கும் மற்ற பேமெண்ட் செயலிகளைப் போலவே வாட்ஸ்அப்பும் பேமெண்ட் அம்சத்தை தொடங்கியது. மற்ற பேமெண்ட் செயலிகளில் இருந்து வேறொரு செயலிகளுக்கு பணம் செலுத்துவது போல், யுபிஐ ஐடிகளில் இருந்து வாட்ஸ் அப்புக்கும் நீங்கள் பணம் அனுப்பலாம். வாட்ஸ்ஆப்பில் இருந்து கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ பேமெண்ட் செயலிகளுக்கும் பணம் அனுப்ப முடியும்.

மேலும் படிக்க | ஃப்ரிட்ஜில் வைத்த உணவை சாப்பிவதால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?

வாட்ஸ்அப்பில் இருந்து UPI-ஐடிகளுக்கு பணம் செலுத்துவது எப்படி? 

* வாட்ஸ்அப்பில் சாப்பாக்ஸை ஓபன் செய்து பேமெண்டில் ‘₹’ சின்னத்தைத் தேர்ந்தெடுக்கவும்

* அதில் பட்டியலில் இருந்து உங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்.

* உங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்கவும். 

* உங்கள் வாட்ஸ்அப் எண்ணும் வங்கியில் பதிவு செய்யப்பட்ட எண்ணும் ஒன்றாக இருந்தால், வாட்ஸ்அப் தானாகவே சரிபார்க்கும்.

* பேங்க் அக்கவுண்ட்டைச் சேர்த்து, வாட்ஸ்அப் வழியாக UPI பேமெண்ட்டுகளைச் செயலாக்கத் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

* ஒரு தொடர்புக்கு பணம் அனுப்ப, அவர்களின் அரட்டையைத் திறந்து, ‘₹’ சின்னத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

* தொகையை உள்ளிட்டு பரிவர்த்தனையைச் செயல்படுத்தவும்.

* வாட்ஸ்அப்பில் செட்டிங்ஸ் மூலம் உங்கள் வங்கி இருப்பையும் பார்க்கலாம்.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News