சீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. 

Last Updated : Jun 19, 2018, 11:59 AM IST
சீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திக்கேயன் மற்றும் இயக்குனர் பொன்ராம் மூன்றாவது முறையாக இணையும் திரைப்படம் சீமராஜா. 

இப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றார். சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். இந்நிலையில் தற்போது சீமராஜா படத்தின் படப்பிடிப்பு இன்று மாலையுடன் நிறைவடைகிறது என்று 24AM நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

 

 

இப்படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories

Trending News