ரேஷன் கடை வேலை; நேர்முகத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

நியாயவிலைக் கடைகளில் காலியாக இருக்கும் விற்பனையாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2022, 09:43 PM IST
 ரேஷன் கடை வேலை; நேர்முகத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு title=

கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும்  நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், பேக்கர் உள்ளிட்ட பதவிகளுக்கு  நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த பதவிகளுக்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், வகுப்புதாரர் சார்ந்துள்ள இனசுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் நேரம்,இடம் நாள் ஆகிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் இல்லாத விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு! 8 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஹால் டிக்கெட் -ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி? 

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூட்டுறவுத்துறை (COOPERATIVE DEPARTMENT) இணையதளம் உள்ளது. அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், அந்தந்த மாவட்டத்தின் கூட்டுறவுத்துறை இணையதளத்துக்கு சென்று ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

உதாரணமாக கோவை என்றால் https://www.drbcbe.in/ - பக்கத்துக்கு சென்று உங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நாமக்கல் - https://www.drbnamakkal.net/, சென்னை - https://www.drbchn.in/ ஆகிய பக்கங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும் படிக்க | அரசு வேலையை எதிர்பார்த்து இருக்கிறீர்களா? டிகிரி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News