Gram Flour Scrubs: சரும பராமரிப்பு என்றாலே முதலில் கிராம்பு கடலை மாவு தான் அனைவரின் விருப்பமாக இருந்து வருகின்றது. இந்த மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் முகத்தில் இறந்த செல்களை நீக்க உதவும்.

ஸ்கின் கேர் டிப்ஸ்: பளபளப்பான சருமத்தைப் பெற நம் பாட்டி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான பொருள் தான் கடலை மாவு. இந்த அற்புதமான கடலைமாவை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் சருமம் பொலிவு பெறுவதுடன் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் நீங்க உதவும். அதன்படி இத்தகைய அற்புதமான கடலை மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் நம் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருவதுடன் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் வைத்துக்கொள்ள உதவும், அது மட்டுமின்றி இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு பாக்டீரியா எதிர்ப்புகளை வழங்குகிறது. இந்நிலையில் இப்போது நாம் இந்த கட்டுரையில் சருமத்துக்கு பொழிவை தரும் இந்த கடலை மாவு ஃபேஸ் பேக் பேஸ்ட்டை எவ்வாறு தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பளபளப்பான சருமத்திற்கு கடலை மாவு பேஸ்ட் | Besan Ubtan For Glowing Skin:
கடலை மாவு, மஞ்சள் மற்றும் பால்: முதலில் இந்த பேஸ்ட்டைத் தயாரிக்க, இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொள்ளுங்கள், இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் தேவைக்கேற்ப பாலை ஊற்றி பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கடலை மாவு பேஸ்ட்டை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி காய வைக்கவும், பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கடலை மாவு மற்றும் முல்தானி மிட்டி: முகம் எண்ணெயாக உள்ளவர்கள் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு மற்றும் முல்தானி மிட்டி இரண்டையும் சம அளவு எடுத்து அதில், சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளவும். சுமார் முகத்தில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ்ட்டை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் ஈரப்பதம் பெறும்.
கடலை மாவு மற்றும் வாழைப்பழம்: முகம் பளபளக்க கடலை மாவு மற்றும் வாழைப்பழத்தை எடுத்து இரண்டையும் கலந்து, அதில் சிறிதளவு பாலை சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இந்த பேஸ்ட்டானது வயதான எதிர்ப்பு பண்புகளை போக்க உதவும்.
கடலை மாவு மற்றும் எலுமிச்சை: இந்த ஃபேஸ் பேக் முகத்தின் நிறமியைக் குறைக்க உதவும். இந்த பேஸ்ட்டானது முகத்தில் இருக்கும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் நீக்க உதவுகிறது. இந்த பேஸ்ட்டை தயாரிக்க இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும், அதில் அரை எலுமிச்சை சாறு கலந்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை சேர்த்து நன்கு பேஸ்ட் வடிவில் தயார் செய்துக் கொள்ளலாம். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 16 நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதுடன், இறந்த சருமத்தை நீக்க உதவும்.
கடலை மாவு மற்றும் தக்காளி: இந்த அற்புதமான ஃபேஸ் பேக் வயதான எதிர்ப்பு பண்புகள் குறைத்து, சருமத்திற்கு நன்மை தரும். இந்த பேஸ்ட்டை தயாரிக்க ஒரு தக்காளியை எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் கடலை மாவை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 15 நிமிடம் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகம் பிரகாசிக்கும்.
கடலை மாவு மற்றும் பப்பாளி: முகத்தில் கரும்புள்ளிகளை நீக்க நீங்கள் கடலை மாவு மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் பப்பாளி பழத்தை நன்கு கலந்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் வடிவில் செய்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 10 நிமிடங்கள் தடவி பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ