அட நீங்க சிங்கிலா... காதலர் தினத்தன்று சிங்கில் இளைஞர்களுக்கு இலவச ட்ரீட்....

காதலர் தினத்தன்று சிங்கில் இளைஞர்களுக்கு இலவச தேநீர் வழங்குவதாக MBA Chai Wala தெரிவித்துள்ளது! 

Last Updated : Feb 9, 2019, 06:44 PM IST
அட நீங்க சிங்கிலா... காதலர் தினத்தன்று சிங்கில் இளைஞர்களுக்கு இலவச ட்ரீட்.... title=

காதலர் தினத்தன்று சிங்கில் இளைஞர்களுக்கு இலவச தேநீர் வழங்குவதாக MBA Chai Wala தெரிவித்துள்ளது! 

வேலன்டைன் நாள் உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.

இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். 

அடுத்த வாரம் நாட்டின் அனைத்து சிங்கிள் ஆண்களும் வயித்தெறிச்சலில் இருக்கும்போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அகமதாபாத்தை சேர்ந்த கஃபே ஒன்று அவர்களுக்கு செம offer கொடுத்துள்ளது. அகமதாபாத்தின் வஸ்திரப்பூர் பகுதியை சேர்ந்த Prafull Billore என்ற MBA பட்டதாரி அதே பகுதியில் MBA Chai Wala என்ற கஃபேவை நடத்தி வருகிறார். இந்த கஃபேவில் 35 வகையான டீ விற்கப்படுகிறது. என்னதான் சொந்த கஃபே வைத்திருந்தாலும், Prafull Billore காதல் அமையாத சிங்கிள் சிங்கம்! தன்னைப் போன்றவை சிங்கிள் சிங்கங்களுக்காக, சமூகவலைத்தளங்களில் ஒரு செம offer அறிவித்துள்ளார்.

அது என்னவென்றால் பிப்ரவரி 14 ஆம், Valentine's Day அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சிங்கிள் பாய்ஸுக்கு தனது கஃபேவில் டீ இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பற்றி Prafull Billore-விடம் கேட்கும் போது, இங்குக் காதல் பிரச்சனை இன்றி சில இளைஞர்கள் நண்பர்களுடன் சந்தோசமாக உள்ளனர். எப்படி காதலர்கள் கொண்டாடுகிறார்களோ அதேபோல Valentine's Day அன்று சிங்கிள் பசங்களும் சந்தோசமாகக் கொண்டாட வேண்டும். அதனால் தான் எனது கஃபேவில் சிங்கிளாக இருப்பவர்களை உற்சாகப்படுத்த இந்த offer அறிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இவரது இந்த ஆஃரை அகமதாபாத்தை சேர்ந்த பல சிங்கிள் சிங்கங்கள் வரவேற்றுள்ளனர். 

 

Trending News