சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள்

Weight Loss Best Drink: பலர் ஓவர் வெயிட் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள், இதிலிருந்து விடுப்பட நீங்கள் எண்ணெய் மற்றும் இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2024, 06:35 PM IST
  • உடல் எடையை குறைக்க பாகற்காய்.
  • பாகற்காய் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
  • பாகற்காயில் கலோரிகள் மிகவும் குறைவு.
சட்டுபுட்டுன்னு உடல் எடை குறையனுமா? அப்போ இந்த பானத்தை குடிங்யுங்கள் title=

Bitter Gourd For Weight Loss: உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, ​​முதலில் இனிப்பை கைவிட வேண்டும் என்கிற அறிவுறுத்தலை தான் பலரிடமும் பெறுகிறோம், ஆனால் கசப்பான பொருளை சாப்பிட்டால் தொப்பை மற்றும் இடுப்பை சுற்றியிருக்கும் கொழுப்பைக் கரைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் பாகற்காயை கட்டாயம் உடல் எடையை குறைக்க உதவும். இந்த காய் பலருக்கு பிடிக்காது என்றாலும், இது ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகும். உடலில் இந்த காய் மிகவும் நன்மை பயக்கும், இதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால், கண்டிப்பாக உங்கள் வழக்கமான உணவில் நீங்கள் சேர்த்துக் கொள்வீர்கள்.

உடல் எடையை குறைக்க பாகற்காய் சாப்பிடுங்கள் | Bitter Gourd For Weight Loss:
பாகற்காயில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது, அதனுடன் இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம் மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, இதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். இப்போது பாகற்காய் உடல் எடையை எப்படி குறைக்க உதவும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பாகற்காய் உடல் எடையை எப்படி குறைக்க உதவும்?

1. நார்ச்சத்து நிறைந்த உணவாகும்
பாகற்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும். உடல் எடையைக் குறைப்பதற்கான முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று சரியான செரிமானம். இதை உண்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

மேலும் படிக்க | Vikram Diet : எடையை சட்டென குறைக்க நடிகர் விக்ரம் செய்யும் விஷயம்! சிம்பிளா இருக்கே..

2. குறைந்த கலோரி உணவாகும்
உடல் எடையை குறைப்பது நாள் முழுவதும் நாம் எவ்வளவு கலோரிகளை உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது, அதன் அளவு குறைவாக இருந்தால், உடல் எடை கூடாமல் இருக்க உதவும். இது தவிர, இந்த காய்கறியில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், தொப்பை மற்றும் இடுப்பை சுற்றியிருக்கும் கொழுப்பை குறைக்க உதவும்.

3. வைட்டமின் சி நிறைந்துள்ளது
பாகற்காயில் வைட்டமின் சி அதிகளவு நிறைந்துள்ளது. இதன் உதவியுடன் உடலில் இருந்து நச்சுகள் வெளியிடப்படுகின்றன, இதன் காரணமாக உடலின் கூடுதல் கொழுப்பு எரியத் தொடங்குகிறது, அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறத் தொடங்குகிறது.

பாகற்காய் எப்படி சாப்பிட வேண்டும்?
பாகற்காய் சாப்பிட சிறந்த வழி, அதன் சாறு எடுத்து ஜூஸ் வடிவில் குடிப்பது தான், இதன் கசப்புத் தன்மையை குறைக்க சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம், மேலும் இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் எடை படிபடியாகத் குறையத் தொடங்கும்.

முக்கிய குறிப்பு: பாகற்காய் உடலுக்கு நன்மை தரும் என்றாலும் அளவோடு சாப்பிடுவதே நல்லது. குறிப்பாக நீங்கள் உங்கள் டயட்டில் அன்றாடம் பாகற்காயை சேர்த்து கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றது நன்மை.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | முடி உதிர்ந்து, வழுக்கைக்கு குட் பை சொல்லுங்க.. உடனே இதை செய்யுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News