சிறு வயது கனவை நிறைவேற்ற ₹ 90 ஆயிரத்தில் விமானம் தயாரித்த ஏழை தொழிலாளி!!

சிறு வயது ஆசையை நிறைவேற்ற வெறும் 90 ஆயிரம் செலவில் புதிய விமானத்தை ஒரு ஏழை தொழிலாளி தயாரித்துள்ளார்!!

Updated: Apr 11, 2019, 12:25 PM IST
சிறு வயது கனவை நிறைவேற்ற ₹ 90 ஆயிரத்தில் விமானம் தயாரித்த ஏழை தொழிலாளி!!

சிறு வயது ஆசையை நிறைவேற்ற வெறும் 90 ஆயிரம் செலவில் புதிய விமானத்தை ஒரு ஏழை தொழிலாளி தயாரித்துள்ளார்!!

பாகிஸ்தானை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் முகம்மது பயாஸ். இவர் இரவில் வாட்ச்மேன் ஆக பணியாற்றிவருகிறார். பகலில் இவர் பாப்கார்ன் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே தான் ஒரு பைலட்டாக வேண்டும் என்ற தீராத லட்சியம்.  ஆனால், தனது வீட்டு வறுமை காரணமாக தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய நிலை. 

இந்நிலையில், தனது தீராத ஆசையை நிறைவேற தானே ஒரு விமானம் ஒன்றைய தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பணத்தை சேமித்துவைத்து வந்துள்ளார். இதற்காக அவர் சேமித்த பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 44 ஆயிரம் சேர்த்து வைத்தார். இதற்காக தனக்கு சொந்தமாக இருந்த இடத்தையும் விற்பனை செய்துள்ளார். 

இதையடுத்து, அந்த பணத்தை வைத்து எந்த வித தொழிற்நுட்ப அறிஞர்களின் உதவியும் இன்றி சிறிய விமானத்தை செய்ய துவங்கியுள்ளார். இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நேசினல் ஜியோகிராபி சேனலில் வரும் ஒரு நிகழ்ச்சியில் குட்டி விமானம் செய்வதை பார்த்து துவங்கியுளார். வெற்றிகரமாக இவர் தனது விமானத்தை தயரித்த நிலையில் அந்த விமானத்தில் பறக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல் நிலையத்தை அணுகியுள்ளார். அவருக்கு பறக்க அனுமதியை மறுத்து, அவரின் பாதுகாப்பு கருதி அவர் தயாரித்த விமானத்தை பறிமுதல் செய்து விட்டனர். 

இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில்: "அவரது பறக்கும் கனவிற்கு பெரிதும் மதிப்பளிக்கிறோம். அவரது முயற்சியையும் பெரியதாக பாராட்டுகிறோம். அவரது பாதுகாப்பு கருதியே அவரிடம் இருந்த அவர் தயாரித்த விமானத்தை பறிமுதல் செய்துள்ளோம். இவரின் சிறுவயது ஆசையை நாங்களே பூர்த்தி செய்து வைக்க முயற்சி செய்து வருகிறோம். மேலும் இவரை இதுபோன்ற பல அறிவியல் கண்டுபிடிப்புகளின் ஈடுபடவும் ஊக்கப்படுத்தி வருகிறோம்." என கூறினார்.