முட்டாள்கள் தினம் தொடங்கியதற்கான ஐரோப்பிய நாடுகளில் தான் ஆரப்பிக்கப்பட்ட எனக் கூறப்படுகிறது. ஆனால் முட்டாள்கள் தினம் தோன்றியதற்கு பல வரலாற்றுக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதுவரை உண்மையான காரணம் யாருக்குமே தெரியவில்லை. காரணம் தெரியவில்லை என்றாலும், ஏப்ரல் 1-ம் தேதி அன்று, உலக முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாப்படுகிறது என்பது தான் வியப்பு.
முட்டாள்கள் தின அன்று அடுத்தவரை முட்டாளாக்க கேலி, கிண்டல், பொய், வதந்தி போன்ற செயல்களில் ஈடுபடுவதால், சில சமயம் இது போன்ற செயல்களால் பெரும் சிக்கல்களும் ஏற்படுகிறது. எனவே தினத்தை கொண்டாடுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாமல் கொண்டாடவேண்டும். மேலும் தினத்தை கொண்டாடும் போது, அந்த தினத்தை பயனுள்ள தினமாக கொண்டாட வேண்டும்.
எனவே ஜீ நியூஸ் சார்பாக அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள். இந்த நாளை மகிழ்ச்சியுடன் பயனுள்ள நாளாக கொண்டாடுவோம்.
இந்நிலையில் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். இந்த நாள் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா?
கி.பி. 16-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1-ம் தேதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் காலண்டரில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது.
1582-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி புதிய காலண்டரை 13-ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் காலண்டர் என்று சொல்கிறோம். இந்தக் காலண்டரில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பல நாட்டு மக்களும் ஏற்க மறுத்தார்கள். அப்படி ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.
ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்று கொண்டவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஏப்ரல் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவோர் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், பரிசுப் பெட்டியைத் திறந்தால், அதில் ஒன்றும் இருக்காது. ‘நீ ஒரு முட்டாள்’ என்று துண்டுச்சீட்டுதான் இருக்கும்.
அதேபோலச் சட்டையின் பின்னால் ‘ நான் ஒரு முட்டாள்’ என்ற துண்டுச்சீட்டை ஒட்டி கேலி பேசினார்கள். பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் இப்படி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியதாகச் சொல்கிறார்கள்.
பின்னர் படிப்படியாக எல்லா நாடுகளும் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. தொடக்கத்தில் புதிய காலண்டரை அப்படி ஏற்றுக் கொண்ட நாடுகள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொண்டாடும் புத்தாண்டு தினத்தை, முட்டாள்கள் தினம் என அழைத்தார்கள்.
இப்படித்தான் முட்டாள்கள் தினம் அறிமுகமானது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை.